பதிவு செய்த நாள்
17 நவ2021
19:13

புதுடில்லி:ஆறு பொதுத்துறை நிறுவனங்களை, தனியார்மயமாக்குவதற்கான ஏலம், ஜனவரி மாதத்துக்குள் நடைபெறும் என ‘முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை’ நிறுவனமான, டி.ஐ.பி.ஏ.எம்., செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார்.
‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன்’ உள்ளிட்ட 6 பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க, வரும் ஜனவரிக்குள் ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்; இதற்காக, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், பாண்டே தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பின், நடப்பு ஆண்டில் 5 – 6 நிறுவனங்கள் தனியார்மயமாக்கப் பட உள்ளன.பாரத் பெட்ரோலியம் உரிய கவனம் செலுத்தும் நிலையில் உள்ளது. ‘பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன், பவன் ஹான்ஸ், என்.ஐ.என்.எல்., சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ஆகிய நிறுவனங்களுக்கான ஏலம், டிசம்பர் – ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.அதனால், இந்த ஆண்டிலேயே அதற்கான பணிகள் நிறைவுபெற்றுவிடும் என்று பாண்டே தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை பொறுத்தவரை, கடினமாக உழைத்து வருவதாகவும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பங்கு வெளியீடு நடைபெற்றுவிடும் என்றும் பாண்டே தெரிவித்துஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|