பதிவு செய்த நாள்
17 நவ2021
19:17

புதுடில்லி:நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 45.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 31 ஆயிரத்து 241 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. முக்கியமான சந்தைகளில் தேவை அதிகரித்ததை அடுத்து, இப்பிரிவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் கோலின் ஷா மேலும் தெரிவித்துள்ளதாவது:இத்துறையில் ஒட்டுமொத்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக ஆபரண தயாரிப்பு பணிகள் சூடுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக, ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.தீபாவளிக்கு பிறகான ஓய்வு காரணமாக, வரும் மாதத்தில் ஏற்றுமதி குறையக்கூடும். ஆனால், நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் மீண்டும் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.கடந்த அக்டோபரில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி மட்டும் 72.05 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் பிரிவில் 3.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|