‘ஏர் இந்தியா’வை ஒருங்கிணைத்து பெரிய நிறுவனமாக்குகிறது ‘டாடா’ ‘ஏர் இந்தியா’வை ஒருங்கிணைத்து பெரிய நிறுவனமாக்குகிறது ‘டாடா’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
விமான பயண கட்டணம் 30 – 100 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2021
19:56

மும்பை:உள்நாட்டு விமான பயணியரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், கூடவே விமான கட்டணங்களும், கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட, 30 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விமான பயணியர் போக்கு வரத்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபரில் 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு தடுப்பூசிகள் போடுவது தீவிரப்படுத்தப்பட்டது, தேவைகள் அதிகரிப்பு, பயணியர் இருக்கையை அதிகரித்தது போன்றவை காரணங்களாக அமைந்தன. மேலும் பன்னாட்டு விமான சேவைகளும் மீண்டும் துவங்க ஆரம்பித்ததை அடுத்து, உள்நாட்டு பயணங்களும் அதிகரித்துள்ளன.

இரண்டாவது அலையை முன்னிட்டு, கடந்த ஜூன் முதல் தேதியிலிருந்து விமான நிறுவனங்கள் 50 சதவீத இருக்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப் பட்டு இருந்தது.அக்டோபர் 18ம் தேதியிலிருந்து, 100 சதவீத இருக்கை வசதியை பயன்படுத்தி கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.இதையடுத்து,

இந்த விமான கட்டண உயர்வு சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம் என்கிறது, சுற்றுலா துறையை சேர்ந்த ‘தாமஸ்குக்’ நிறுவனம்.ஏறிய கட்டணம் இறங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் நவம்பர் 18,2021
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)