விமான பயண கட்டணம் 30 – 100 சதவீதம் அதிகரிப்பு விமான பயண கட்டணம் 30 – 100 சதவீதம் அதிகரிப்பு ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’ ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2021
20:38

ஹெல்த்கேரில் இறங்கும் ‘பிளிப்கார்ட்’
‘பிளிப்கார்ட்’ நிறுவனம், டிஜிட்டல் ஹெல்த்கேர் துறையிலும் நுழைகிறது. இதன் முதல்படியாக, கோல்கட்டாவை சேர்ந்த, ‘ஆன்லைன்’ மருந்தகம் மற்றும் டிஜிட்டல் ஹெல்த்கேர் தளம் ஆகியவற்றை நடத்தி வரும் ‘சஸ்தாசுந்தர் டாட் காம்’ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்தி உள்ளது.
ஆலோசனை குழுவின் கணிப்பு
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 7 – 7.5 சதவீதமாக இருக்கும் என, பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.ஏற்கனவே பன்னாட்டு நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 8.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோகரன்சிக்கு வரி
‘கிரிப்டோகரன்சி’ முதலீட்டின் வாயிலாக பெறப்படும் லாபத்தை, வருமான வரிக்குள் கொண்டு வரும் வகையில், வருமான வரி சட்டத்தில் விரிவான திருத்தத்தை கொண்டு வருவது குறித்து, அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் உரையில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காகித பாலிசி ஆவணம்
காப்பீட்டு பாலிசி எடுக்கும் வாடிக்கையாளர்களில், கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இன்னும் பாலிசிகளை, காகித ஆவணமாகவே பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பது ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது. அதேபோல், இழப்பீடு கோரும்போது, பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ஒரிஜினல் காகித ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கோருகின்றன.
சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட்
‘பிரின்சிபல் அசெட் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் சொத்து மேலாண்மை வணிகத்தை ‘சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட்’ வாங்குவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)