வளர்ச்சி 9.1 சதவீதம் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 9.1 சதவீதம் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கணிப்பு ...  நீரின்றி காரை சுத்தப்படுத்தலாம் ‘ஹூண்டாய்’ நிறுவனம் அழைப்பு நீரின்றி காரை சுத்தப்படுத்தலாம் ‘ஹூண்டாய்’ நிறுவனம் அழைப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
23:47

‘ஸ்டார் லேபிளிங்’ அவகாசம்
வீட்டு உபயோகப் பொருட்களின் மின்சார திறனை குறிக்கும் வகையிலான, ‘ஸ்டார் லேபிளிங்’ திட்டத்தை அறிமுகம் செய்வதை, மேலும் ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது, அரசு.அரசின் இந்த அறிவிப்பை, நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு துறையினர் வரவேற்றுள்ளனர்.
யுனிகார்ன் ஆனது, ‘நோபுரோக்கர்’
ஆன்லைன் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான ‘நோபுரோக்கர் டாட் காம்’, ‘யுனிகார்ன்’ அந்தஸ்து பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது. 7,500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் ஆப் நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக கருதப்படும்.பெங்களூரைச் சேர்ந்த நோபுரோக்கர் டாட் காம், 1,575 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியதை அடுத்து, அதன் மதிப்பு 7,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
‘பியூச்சர் – அமேசான்’ சமரசம்
‘பியூச்சர்’ குழுமத்தின் சில்லரை வணிகத்தை, ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ வாங்கியதை அடுத்து, அதை எதிர்த்து ‘அமேசான்’ சட்ட நடவடிக்கைகளுக்குள் சென்றது.இந்நிலையில், அமேசான் நிறுவனம், அதன் மீதான புகாரை, சந்தை போட்டிகள் ஆணையத்திடமிருந்து திரும்ப பெற்று கொள்ளுமாறு பியூச்சர் குழுமத்தை கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சமரசம் ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய் ‘ரிலீஸ்’
சர்வதேச எண்ணெய் விலையை குறைக்கும் வகையில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் இணைந்து, இந்தியா தன்னுடைய அவசரகால கையிருப்பில் இருந்து, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ‘ரிலீஸ்’ செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, இந்தியா இத்தகைய முடிவை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘ரிலையன்ஸ் ஜியோ’ சறுக்கல்
செப்டம்பர் மாதத்தில்,‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம் 2.74 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அதேசமயம், ‘ரிலையன்ஸ் ஜியோ’ 1.9 கோடி வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது.மேலும், மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான ‘வோடபோன் ஐடியா’, 10.77 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)