‘ரிலையன்ஸ் -– சவுதி அராம்கோ’ தள்ளிப்போகும் பங்கு விற்பனை ‘ரிலையன்ஸ் -– சவுதி அராம்கோ’ தள்ளிப்போகும் பங்கு விற்பனை ... பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1657.94 புள்ளிகள் சரிவு பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1657.94 புள்ளிகள் சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்’ பங்கு விலை அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
19:49

புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலய்டு இன்சூரன்ஸ்’ நிறுவனம், இம்மாதம் 30ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
இதையடுத்து, ஒரு பங்கின் விலையை 870 – 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டார் ஹெல்த் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 7,249 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான பங்கு வெளியீடு, இம்மாதம் 30ம் தேதியன்று துவங்கி, டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்த பங்கு வெளியீட்டின் போது 2,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 5.8 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் பங்கு வெளியீட்டின்போது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
திரட்டப்படும் தொகையை கொண்டு, வலுவான மூலதன தளத்தை ஏற்படுத்திக் கொள்ள நிறுவனம் விரும்புகிறது.ஸ்டார் ஹெல்த் நிறுவனம், நாட்டில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். பங்குச் சந்தை முதலீட்டு நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளிட்ட பலர், இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)