எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை ...   ஆயிரம் சந்தேகங்கள் :வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., பாதுகாப்பாக இருக்குமா? ஆயிரம் சந்தேகங்கள் :வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., பாதுகாப்பாக ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வி.எல்.சி.சி., ஹெல்த் கேர் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
20:41

புதுடில்லி:‘வி.எல்.சி.சி., ஹெல்த் கேர்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ வழங்கி உள்ளது.
அழகு மற்றும் ஆரோக்கியம் ஆகிய பிரிவில் இயங்கும் மிகப் பெரிய உள்நாட்டு நிறுவனங்களில், வி.எல்.சி.சி., ஹெல்த் கேர் நிறுவனமும் ஒன்றாகும்.செபியிடமிருந்து அனுமதியை தற்போது பெற்றிருக்கும் நிலையில், இந்நிறுவனம், டிசம்பர் மாத இறுதியில் பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு வெளியீட்டின்போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 89.22 லட்சம் பங்குகளையும், இந்நிறுவனம் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, வி.எல்.சி.சி., வெல்னஸ் கிளினிக், வி.எல்.சி.சி., இன்ஸ்டிடியூட் ஆகியவற்றை அமைக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும், பிராண்டு மேம்பாட்டுக்கும் பயன்படுத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிறுவனம் 143 நகரங்களில், 310 இடங்களிலும்; 12 நாடுகளிலும் இயங்கி வருகிறது.ஏற்கனவே, கடந்த 2015ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை பெற்ற போதும், அப்போது வராமல் விட்டுவிட்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)