கிரிப்டோவுக்கு வரி விதிப்பு தேவை கிரிப்டோவுக்கு வரி விதிப்பு தேவை ...  ‘யுனிகார்ன்’ எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது ‘யுனிகார்ன்’ எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது ...
ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., வசதியின் முக்கிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
19:17

வருமான வரித்துறை, ஏ.ஐ.எஸ்., எனப்படும் ஆண்டு தகவல் அறிக்கை வசதியை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. வருமான வரித்துறையின் இணையதளத்தில் அணுக கூடிய இந்த அறிக்கை, நிதியாண்டில் ஒருவர் மேற்கொண்ட அனைத்து நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை கொண்டுள்ளது.

வருமான வரி செயல்பாடுகளை மேலும் வெளிப்படையான தன்மை கொண்டதாக மாற்றும் நோக்கத்துடனும், வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

தகவல் அறிக்கை:

ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., நிதியாண்டில் ஒருவர் மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை கொண்டுள்ளது. நிதி பரிவர்த்தனை தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கும் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

விரிவான தகவல்கள்:

இந்த அறிக்கை, சம்பளம், வட்டி வருமானம் உள்ளிட்ட பல்வேறு வருமான தகவல்களை கொண்டிருப்பதோடு, மியூச்சுவல் பண்ட் ஊக்கத்தொகை, பங்கு விற்பனை லாபம் உள்ளிட்ட தகவல்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே உள்ள, ‘26 ஏஎஸ்’ படிவத்தை விட இது விரிவானது.

இரண்டு பகுதிகள்:

அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதி, பான் எண், அடையாளம் மறைக்கப்பட்ட ஆதார் எண், வரி செலுத்துபவர் பெயர் உள்ளிட்ட தகவல்களை கொண்டுள்ளது. இரண்டாம் பகுதியில் நிதி பரிவர்த்தனைகள், வரி விபரங்கள், டி.டி.எஸ்., பிடித்தம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தகவல் சுருக்கம்:

இந்த அறிக்கையை பயனாளிகள் வருமான வரித்துறை தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அறிக்கையில் உள்ள தகவல்கள் சுருக்கமாக, வரி செலுத்துபவர் தகவல் சுருக்கமாக டி.ஐ.எஸ்., அளிக்கப்படுகிறது. அறிக்கை விபரங்களை புரிந்து கொள்வதற்கான எளிய வழியாக இது அமைகிறது.

முறையீடு வசதி:

அறிக்கையில் உள்ள தகவல்களில் பிழைகள் இருந்தால், அது தொடர்பாக புகார் செய்து திருத்தம் செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தகவல் அறிக்கையை கவனமாக பார்த்து, தகவல்களை உறுதி செய்து கொள்ளுமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. திருத்தப்படும் தகவல்கள் நிகழ்நேரத்தில் சேர்க்கப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ‘அதானி வில்மார்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, ... மேலும்
business news
கோல்கட்டா:அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, 500 பில்லியன் டாலர் அதாவது, 37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி:துறைமுகங்கள், விமான நிலையங்கள், உருக்கு வணிகம் என பல துறைகளில் கால் பதித்து வரும் அதானி குழுமம், ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 28,2021
காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்புபொதுத்துறை நிறுவனமான ‘எச்.எல்.எல்., லைப்கேர்’ நிறுவனத்தை வாங்க விரும்பும் ... மேலும்
business news
புதுடில்லி:‘பார்தி’ குழுமத்தின் பின்னணியில் செயல்படும் ‘ஒன்வெப்’ நிறுவனமும், செயற்கைக்கோள் சேவைகளை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)