பதிவு செய்த நாள்
04 டிச2021
18:47

புதுடில்லி:அண்மைக் காலமாக, பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது என்றும், இளவயதினர் இத்தகைய கார்களை வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதாகவும், கார்கள் விற்பனைக்கான ஆன்லைன் தளமான ‘கார்ஸ்24’ தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:புதிய கார்கள் விலை அதிகரித்து வருவது, கொரோனாவால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் மக்கள் காட்டும் தயக்கம் ஆகியவை, பழைய கார்களுக்கான சந்தை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், பழைய கார்களுக்கான ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்துள்ளதும், விற்பனை அதிகரிக்க காரணமாக உள்ளது. பழைய கார்களை வாங்குபவர்களில், கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர், இளவயதினராக உள்ளனர். மேலும், பெண்கள் கார் வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இது, கடந்த ஆண்டு இந்த துறையின் சராசரி 10 சதவீதமாக இருந்தது, நடப்பு ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய கார்கள் விற்பனையை பொறுத்தவரை, 43 சதவீதம் பேர் ‘ஹேட்ச்பேக்’ கார்களையும், 26 சதவீதம் பேர் எஸ்.யு.வி., மாடல் கார்களையும் வாங்க விரும்புகிறார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|