பதிவு செய்த நாள்
04 டிச2021
18:56

மும்பை:கடந்த நவம்பர் 5ம் தேதியுடன் முடிவடைந்த இருவாரங்களில், வங்கி டெபாசிட்டுகள் மிகவும் அதிகரித்துள்ளது என்றும், கடந்த 24 ஆண்டுகளில், ஐந்தாவது மிகப் பெரிய உயர்வாகும் இது என்றும், ‘எஸ்.பி.ஐ., ரிசர்ச்’ அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த நவம்பர் 5ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கி டெபாசிட்டுகள், 3.3 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது, கடந்த 24 ஆண்டுகளில், ஐந்தாவது மிகப் பெரிய உயர்வாகும். பொதுவாக, தீபாவளி வாரத்தில் இவ்வளவு அதிகமாக டெபாசிட்டுகள் திரளுவது கிடையாது. வங்கி இருப்பில் இருந்து அதிகளவில் பணத்தை வெளியே எடுப்பது தான் நடக்கும்.
ஆனால் இம்முறை, வழக்கத்துக்கு மாறாக, டெபாசிட் அதிகரித்துள்ளது. ஆனால், அடுத்த இரு வாரத்தில் 2.7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.
உயர்பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின், 2016ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்த இருவாரத்தில், 4.16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|