பதிவு செய்த நாள்
04 டிச2021
18:59

மும்பை:தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, இந்திய தர நிர்ணய கழகத்தில், நகைக்கடைக்காரர்கள் பதிவு செய்வது அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாத மத்தியில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து, பி.ஐ.எஸ், எனும், இந்திய தர நிர்ணய கழகத்தில் பதிவு செய்துள்ள நகைக் கடைக்காரர்கள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது.
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தகவல்படி, கடந்த நவம்பர் 15ம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தோர் எண்ணிக்கை 1.24 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து, 153 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்களின் எண்ணிக்கை, ஜூன் மாதம் 948 ஆக இருந்தது, நவம்பர் மத்தியில் 978 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து நவம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம் 3.89 கோடி நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை பெறப்பட்டுள்ளதாக கவுன்சில் தெரிவித்துள்ளது.ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என அறிவித்ததை அடுத்து, நுகர்வோரின் நம்பிக்கை அதிகரித்துஉள்ளதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|