பதிவு செய்த நாள்
04 டிச2021
19:04

புதுடில்லி:சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘எவர்கிராண்டு’ நிதிச் சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், அதன் நிறுவனருக்கு, சீன நிர்வாகம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டு, கிட்டத்தட்ட 22.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது.இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஹாங்காங் பங்குச் சந்தைக்கு அறிக்கை ஒன்றை இந்நிறுவனம் வழங்கியது.
அதில், தற்போது இருக்கும் பணப்புழக்க நெருக்கடி காரணமாக, அதன் நிதி பிரச்னைகளை சமாளிக்க, போதுமான நிதி நிறுவனத்திடம் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தெரிவித்திருந்தது.இதையடுத்து, குவாண்டாங் மாகாண அரசு, எவர்கிராண்டு நிறுவனர் ஹூ கா யானுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. சம்மனில் நிறுவனத்தின் கடனை அவரது சொந்த பணத்திலிருந்து அடைக்கு மாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|