ஐபிஓ விண்ணப்பம் மற்றும் டிமேட் கணக்கை வாட்ஸ்அப் மூலம் திறக்க அனுமதிக்கும் அப்ஸ்டாக்ஸ்ஐபிஓ விண்ணப்பம் மற்றும் டிமேட் கணக்கை வாட்ஸ்அப் மூலம் திறக்க ... ... 9வது முறையாக வட்டி வகிதம் மாற்றமின்றி நீடிப்பு 9வது முறையாக வட்டி வகிதம் மாற்றமின்றி நீடிப்பு ...
பிரிட்ஜ்ஸ்டோனின் எல் 370 எச் எல் டயர்கள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
13:53

கட்டுமானம் மற்றும் சுரங்கத் துறைகளுக்கான தனது புதிய டயரை பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா அறிமுகப்படுத்தியது. அதிக சுமையைக் கொண்டு செல்லக்கூடிய கனரக வாகனங்களை இயக்கும் இத்துறைகளுக்கு ஏற்ற வகையில் சிறந்த வலிமை, செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகிய அம்சங்களோடு இந்த டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய அச்சு சுமை விதிமுறைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில், 20 சதவீதம் அதிக எடையை ஏற்றிச் செல்ல லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த சுமை அதிகரிப்புக்கு ஏற்ற டயர்கள் தேவைப்பட்டதை தொடர்ந்து, அதிக எடையை கையாளக் கூடிய வகையில் பிரிட்ஜ்ஸ்டோனின் புதிய டயரான ‘எல் 370 எச் எல்’ கட்டமைக்கப்பட்டுள்ளது.

இத்துறைகளை சேர்ந்த கனரக வாகனங்கள் கரடுமுரடான நிலப்பரப்பில் பயன்படுத்தப்படுவதால், நிலப்பரப்பின் கடுமையைத் தாங்கக்கூடிய டயராக இது இருக்கும். இந்த டயரை வடிவமைக்க தனியுரிம மென்பொருளைப் பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா பயன்படுத்தியுள்ளது. ‘எல் 370 எச் எல்’ டயர் சிறப்பு ட்ரெட் கலவையால் ஆனது ஆகும். இதன் மூலம் டயர் ஆயுள் நீடித்து நிலைக்கும். அதிக சுமை பிரிவுக்கு ஏற்ற ‘எல் 70 எச் எல்’ டயர் 295/90ஆர்20 அளவில் கிடைக்கும். வெப்பம் மற்றும் உறுதிக்காக பிளாக் மற்றும் ஷோல்டர் லக் முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த டயர் ஆயுளை அதிகரிப்பது மட்டுமின்றி, வலுவான செயல்திறனையும் மேம்படுத்தும்.

"கட்டமைப்பு மற்றும் சுரங்கத் துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கு செலவு குறைந்த சரக்கு போக்குவரத்து முறை முக்கியம். டயர் செயலிழப்பு இத்துறையை எதிர்மறையாக பாதிக்கும். இத்துறைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள எங்கள் ‘எல் 70 எச் எல்’ சுமூகமான சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும். இதன் மூலம் இந்த முக்கிய துறைகளின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்” என்று பிரிட்ஜ்ஸ்டோண் இந்தியா நிர்வாக இயக்குநர் பராக் சத்புத் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)