எச்.எம்.டி., சிரிஞ்சு ஆலைகள் உற்பத்தியை தொடர அனுமதி எச்.எம்.டி., சிரிஞ்சு ஆலைகள் உற்பத்தியை தொடர அனுமதி ...  நவம்பர் மொத்தவிலை பணவீக்கம் 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வு நவம்பர் மொத்தவிலை பணவீக்கம் 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2021
10:07


கார்ப்பரேட்டுகள் கடன் பாக்கி

பொதுத்துறை வங்கிகள், 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பாக்கிகள் காரணமாக, கிட் டத்தட்ட 2.85 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளதாக, யு.எப்.பி.யு., எனும், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம் நன்றாக இருந்தாலும், அவை எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை, கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்படும் வாராக் கடன் தான் என்றும் தெரிவித்துள்ளது.

பங்கு விலை அறிவிப்பு
‘சுப்ரியா லைப்சயின்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் ஒரு பங்கின் விலை 265 – 274 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.இந்நிறுவனம், 700 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், இம்மாதம் 16ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.
புதிய பெயரில் ‘குரோபர்ஸ்’
‘ஆன்லைன்’ வாயிலாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வரும் ‘குரோபர்ஸ்’ நிறுவனம், தன் பெயரை ‘பிளிங்இட்’ என மாற்றிக்கொண்டிருக்கிறது.‘சாப்ட்பேங்க்’ மற்றும் ‘ஸொமாட்டோ’ ஆகிய நிறுவனங்களின் பின்னணியில் இயங்கி வரும் நிறுவனமாகும் இந்த குரோபர்ஸ்.

குறைந்த வீட்டுக்கடன் வட்டி

‘பேங்க் ஆப் மஹாராஷ்டிரா’ நிறுவனம், இதுவரை இல்லாத வகையில், அதன் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 6.40 சதவீதமாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது இது, 6.80 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.மேலும் இவ்வங்கி, கார் கடனுக்கான வட்டியை, தற்போதுள்ள 7.05 சதவீதம் என்பதிலிருந்து, 6.80 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
‘போன்பே’ புதிய சாதனை
‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை நிறுவனமான ‘போன்பே’ இந்தியாவில் கிட்டத்தட்ட 2.5 சிறுவணிகர்கள், பெட்டிக்கடைகளை டிஜிட்டல்மயமாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், இதன் தளத்தில் ‘ஆப்லைன்’ வணிக பரிவர்த்தனைகள், கடந்த ஆண்டில் மட்டும் 200 சதவீத வளர்ச்சியை பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)