பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நிதியமைச்சர் இன்று துவக்குகிறார் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நிதியமைச்சர் இன்று துவக்குகிறார் ... தமிழகத்தில் 6 புதிய டிஜிட்டல் கிளைகளை திறந்த டாடா ஏஐஏ லைப் இன்ஸ்சூரன்ஸ்  தமிழகத்தில் 6 புதிய டிஜிட்டல் கிளைகளை திறந்த டாடா ஏஐஏ லைப் இன்ஸ்சூரன்ஸ் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2021
20:20

‘மூட்ஸ்’ தனியார்மயமாகிறது‘
எச்.எல்.எல்., லைப் கேர்’ நிறுவனம் மற்றும் ‘புராஜெக்ட்ஸ் அண்டு டெவலப்மென்ட் இந்தியா’ எனும் இரு பொதுத்துறை நிறுவனங்களில், அரசு அதன் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதில், எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனம், அதன் ‘மூட்ஸ்’ எனும் ஆணுறை தயாரிப்பால் மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
போலி வர்த்தக செயலிகள்
இந்தியாவில், போலி மின்னணு வர்த்தக செயலிகள், கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என, ‘எம்பில்டர்இட்’ எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.பண்டிகை காலத்தை முன்னிட்டு, மொத்த பதிவிறக்கத்தில் போலி மின்னணு வர்த்தக செயலிகள் பதிவிறக்கம் 51 சதவீதமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
‘டாடா – மைக்ரோசாப்ட்’ பேச்சு‘
டாடா’ குழுமம், அதன் டிஜிட்டல் வணிகத்தில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் முதலீடு செய்வது குறித்து, பேச்சு நடத்தி வருகிறது.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் மின்னணு வர்த்தகத்துக்கு போட்டியாக, டாடா நிறுவனமும் மிகப் பெரிய டிஜிட்டல் வர்த்தகத்தை துவக்க உள்ளது.இதன் தொடர்ச்சியாக, இதில் துணிகர முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாக, பல நிறுவனங்களுடன் டாடா பேச்சு நடத்தி வருகிறது.
ஐந்து இந்திய பிராண்டுகள்உலகின் ‘டாப் – 100’
ஆடம்பரப் பொருட்களின் பட்டியலில், ஐந்து இந்திய பிராண்டுகள் இடம்பெற்று உள்ளன. ‘டெலாய்ட்’ அறிக்கையின்படி, இந்த பட்டியலில் ‘டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுகாஸ், பி.சி.,ஜூவல்லர்ஸ், திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி’ ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
‘ரிலையன்ஸ் நேவல்’ ஏலம்‘
ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங்’ நிறுவனத்தை வாங்குவதற்காக நடைபெற்று வந்த நீண்ட நாள் போட்டியில், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான, நிகில் வி மெர்ச்சன்ட் தலைமையிலான கூட்டமைப்பு வெற்றி பெற்று உள்ளதாக தெரியவந்துள்ளது.அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க, மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)