பதிவு செய்த நாள்
16 டிச2021
21:47

மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது.
டாடா குழுமம், உப்பு முதல் உலோகம் வரை ஏராளமான வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமம், அழகு சாதன சந்தையில் மீண்டும் கால் பதிக்க உள்ளது.
பெண்களிடம் வரவேற்பு
கடந்த, 1953ல், டாடா குடும்பத்தைச் சேர்ந்த சிமோனி டாடா என்பவரின் துணையில், புதுமையான முக அழகு கிரீம் தயாரிக்கப்பட்டது.நாள் முழுதும் முகப் பவுடர் கலையாமல், பொலிவாக காட்சி அளிக்க உதவும் இந்த கிரீமிற்கு இந்திய கடவுளான மகாலட்சுமியை குறிக்கும் வகையில், பிரெஞ்சு மொழியில் ‘லாக்மி’ என பெயரிடப்பட்டது.
இந்திய அழகு சாதன துறையில் முதன் முறையாக ‘பிராண்டு’ பெயரில் அறிமுகமான லேக்மிக்கு பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. எனினும், டாடா குழுமம், 1998ல், லேக்மி பிராண்டை, யூனிலிவர் நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு விற்பனை செய்து விட்டது.
இந்நிலையில், டாடா குழுமம், அதன் ‘டிரென்ட்’ நிறுவனம் வாயிலாக, மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையில் களமிறங்க உள்ளது.இது குறித்து, டிரென்ட் நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனர், நோயல் டாடா கூறியதாவது:என் தாயார் சிமோனி டாடா உருவாக்கிய லேக்மியை தொடர்ந்து எண்ணற்ற அழகுப் பொருட்கள் இந்திய சந்தையை கலக்கி வருகின்றன.
எதிர்பார்ப்பு
கடந்த, 2017 நிலவரப்படி, இந்திய அழகு சாதனங்களின் சந்தை மதிப்பு, 82 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2025ல், இரு மடங்கு உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் இறங்க உள்ளோம். அத்துடன், காலணி, உள்ளாடை ஆகியவற்றின் வர்த்தகத்தையும் துவக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அழகு சாதன சந்தையில் ‘ஹிந்துஸ்தான் யூனிலிவர், நைக்கா’ போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக டாடா குழுமம் உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|