பதிவு செய்த நாள்
16 டிச2021
21:49

புதுடில்லி:அமேசான் இந்தியா நிறுவனத்தின் விற்பனையாளர்கள் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது.கொரோனா காரணமாக ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொருட்களை விற்பனை செய்வதற்காக ஏராளமானோர் அமேசான் வலைதளத்தில் இணைந்து வருகின்றனர்.
இது குறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மணிஷ் திவாரி கூறியதாவது: இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் இணைந்துள்ள விற்பனையாளர்கள் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில், சிறிய, நடுத்தர தொழில் பிரிவினர் எண்ணிக்கை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது; அவற்றில் பாதிக்கு மேற்பட்டோர், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த, 2020 ஜனவரிக்குப் பின், புதிதாக, 4 லட்சத்து 50 ஆயிரம் விற்பனையாளர்கள் அமேசானில் இணைந்து உள்ளனர். இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் ஆவர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|