பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சீனாவுக்கு இரு மடங்கு அதிகரிப்பு பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சீனாவுக்கு இரு மடங்கு அதிகரிப்பு ...  'ஏர் இந்தியா' கைமாறுவதில் தாமதம் 'ஏர் இந்தியா' கைமாறுவதில் தாமதம் ...
ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை மனைவி பெயரில் முதலீடு செய்யலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2021
00:22

தமிழ்நாடு வணிகவரி நல வாரியத்தில், உறுப்பினராக சேர்வதற்கு வழிமுறைகள் என்ன? வணிகவரி நல வாரியத்தின் உதவிகளை தெரியப்படுத்தவும்.
எஸ்.மணிகண்டன், மதுரை.
இணையம் வழியாக சேர்வதற்கு https://www.tn.gov.in/tntwb/tamil/index.htm என்ற சுட்டியை தட்டவும். இதில் பதிவு செய்ய சிரமம் ஏற்பட்டால், அருகில் உள்ள வணிகவரி வரிவிதிப்பு அலுவலகத்தை அணுகி, தங்கள் பதிவை மேற்கொள்ளலாம். உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய். இதில் உறுப்பினர் ஆவதன் வாயிலாக வணிகர்களுக்கு குடும்ப நல உதவி, மருத்துவம், கல்வி உதவி, விளையாட்டு போட்டி, தீ விபத்து பாதிப்புக்கு உதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதியுதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என, 7 வகையான நலத் திட்டங்கள் கிடைக்கும்.
வங்கியிலிருந்து பெற்ற ‘கிரெடிட் கார்டு’ காலாவதியாகி, 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் சேவை கட்டணமாக ஒரு தொகையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகின்றனர். இது சரிதானா? சரியில்லையென்றால், தொகையை திரும்பப் பெற முடியுமா?

புருஷோத்தமன், மதுரை.

கார்டு காலாவதி ஆகியிருக்கலாம். ஆனால், அதில் கட்ட வேண்டிய தொகை ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணமாக, ‘நெகட்டிவ் ரிவார்டு பாயின்ட் பேலன்ஸ்’ என்பது உண்டு. அதாவது பல இடங்களில் பொருட்களையோ, சேவைகளையோ பெறும்போது, ‘ரிவார்டு’ புள்ளிகள் கிடைக்கும். ஒருவேளை அப்பொருட்களை திரும்ப தந்துவிட்டால், புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும். விமான மற்றும் ஓட்டல் முன்பதிவுகள் ரத்தானாலும், புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும். இதெல்லாம் சேர்ந்து கொண்டு, ‘நெகட்டிவ் ரிவார்டு பாயின்ட் பேலன்ஸ்’ உருவாகிவிடும்.

அதற்கான தொகையை கட்டி முடிக்கும் வரை, உங்கள் கிரெடிட் கார்டுக்கு உயிர் உண்டு. அதனால், ஆண்டு சேவை கட்டணம் வசூலிக்கப்படவும் வாய்ப்பு உண்டு. எஸ்.பி.ஐ., கார்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தெளிவுபடுத்தி கொள்ளவும்.
நான் ஓய்வு பெறும் போது கிடைக்கும் பெரும் தொகையை, வரியை தவிர்க்க ஏதுவாக, இல்லத்தரசியாக இருக்கும் என் மனைவியின் பெயரில் முதலீடு செய்யலாமா?
டேனியல், கோவை.
இல்லத்தரசி பெயரில் முதலீடு செய்வதால், வரியை தவிர்க்க முடியும் எனக் கருத வேண்டாம். அந்த முதலீடு மூலம், அவர் ஈட்டும் வட்டியும் உங்களுடைய வருவாய் கணக்கிலேயே சேரும். இதற்கு ‘கிளப்பிங்’ என்று பெயர். ஆனால், ‘வரிவிலக்கு உள்ள முதலீடுகள்’ உண்டு. உதாரணமாக, பி.பி.எப்., வரிவிலக்கு கடன் பத்திரங்கள், யூனிட் லிங்க்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள், இ.எல்.எஸ்.எஸ்., மியூச்சுவல் பண்டுகள், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், புதிய பென்ஷன் திட்டம், பென்ஷன் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், வரி சேமிப்புடன், மூதலீட்டுக்கான பலனையும் அனுபவிக்கலாம்.
நான் வைத்திருக்கும் சில நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்படவில்லை. இவற்றை நீக்குவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? ‘டீமேட்’ கணக்கை மூட வேண்டும் என்றால், இதனால் ஏதேனும் இடைஞ்சல் வருமா?
என்.ஸ்ரீதரன், வாட்ஸ் ஆப்.
வரும். ‘டீமேட்’டில் எந்த பங்கும் இல்லாமல், காலியாக இருந்தால் தான், அந்த கணக்கை மூட முடியும். இந்நிலையில், உங்களிடம் உள்ள பட்டியலிடப்படாத பங்குகளை, நண்பர் அல்லது உறவினரது டீமேட் கணக்குக்கு மாற்றிக் கொடுத்துவிடுவதே இப்போது இருக்கும் ஒரே வழி. காகித வடிவில் இல்லாத பங்கு களை, மீண்டும் காகித பங்கு பத்திரமாக மாற்றிக் கொள்வது இன்னொரு வழி. அதற்கு பங்குகள் வெளியிட்ட நிறுவனங்கள் உயிரோடு இருக்க வேண்டும். அவை ஏற்கனவே காணாமல் போய்விட்டதால் தான், பங்குச் சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. இது ஒரு பெரிய பிரச்னையாக மாறிக் கொண்டு இருக்கிறது. உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ டீமேட் கணக்கு இல்லையென்றால் என்ன செய்வது? நம்ம நாட்டில், ஒன்றை துவங்குவது எளிது; மூடுவது கடினமாக இருக்கிறது. பிரயோஜனமற்ற பங்குகளை வைத்துக் கொண்டு, டீமேட்டை மூடவும் முடியாமல் திண்டாடும் சாதாரணமானவர்களுக்கு ‘செபி’ வழிகாட்ட வேண்டும்.
வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை. என் கணக்கு பாதுகாப்பாக இருக்குமா? எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் எத்தனை ஆண்டுகள் வரை நான் கணக்கு வைத்திருக்கலாம்?
பி.திலகராஜன், மின்னஞ்சல்.
தொடர்ச்சியாக பரிவர்த்தனை இல்லை என்றால், உங்கள் கணக்கு முதலில் ‘டார்மென்ட்’ ஆகும்; பின்னர் ‘இன் ஆக்டிவ்’ ஆகும். பரிவர்த்தனை இல்லாமல், இத்தனை ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று எந்த விதியும் இல்லை. பாதுகாப்பு என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்கள் கணக்கில் எந்த பரிவர்த்தனை நடந்தாலும், அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. உபயோகமுள்ள ஒன்றிரண்டு கணக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற வற்றை மூடிவிடுவதே சிறந்தது; தேவையற்ற தலைவலி எதற்கு?
வருவாய் விபரம் கொடுத்துவிட்டு, ‘செல்ப் அசெஸ்மென்ட்’ வரியையும் கட்டி, அதற்கான ரசீதையும் பெற்றுவிட்டேன். மீண்டும் வருமான வரி வலைதளத்துக்குள் சென்றால், வரி செலுத்த சொல்கிறது; என்ன செய்ய வேண்டும்?

காந்திமதி, மின்னஞ்சல்.
நீங்கள் இணையத்தில் வங்கி பரிவர்த்தனைகளை அதிகம் செய்யும் அனுபவசாலி என்று தெரிகிறது. ஆனால், வருமான வரி வலைதளம் நமக்கு ‘பெப்பே’ காட்டுகிறது. மற்ற வணிக வலைதளங்களில், வங்கியில் பணம் செலுத்தியவுடன், அந்த விபரம் முதன்மை வலைதளத்துக்கு சென்று, பேமென்ட் முடிந்துவிட்டது என்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடும். வருமான வரி தளத்தில் அப்படி இல்லை.

செல்ப் அசெஸ்மென்ட் ரசீதை வைத்துக் கொண்டு, அதில் இருக்கும் ‘செலான் ஐடென்டிபிகேஷன் நம்பர், பி.எஸ்.ஆர்.,கோடு’ கட்டிய தொகை ஆகியவற்றை, வருமான வரி தளத்தில், வரி கட்டிய விபரத்தை பதிவு செய்யும் இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதன் மூலம், மொத்த வரி பிடித்த விபரமும், வரி செலுத்திய விபரமும் சரிபார்க்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை ஏதும் மிச்சமில்லை என்று காண்பிக்கும்.அதன்பின், ஐ.டி.ஆர்., சமர்ப்பிக்கலாம். வருமான வரி வலைதளமும், வரி வசூல் செய்யும் வலைதளமும் அரசாங்கத்துடையது தான். இவை இரண்டும் ஏன் பேசிக் கொள்ள மாட்டேன் என்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,

pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)