பதிவு செய்த நாள்
29 டிச2021
02:25

மும்பை:பொதுத்துறையை சேர்ந்த எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் முதன் முறையாக, பங்கின் விலை 38.95 ரூபாய் என்பதை எட்டிப் பிடித்துள்ளது.நேற்றைய தினம், மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை அதிகபட்ச விலை உயர்வு வரம்பான 10 சதவீதத்தை எட்டி, 38.95 ரூபாயாக நிலைபெற்றது.
நடப்பு டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்நிறுவன பங்குகள் விலை 117 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில், இப்பங்கின் விலை கிட்டத்தட்ட 17.95 ரூபாய் அளவுக்கு, மும்பை பங்குச் சந்தையில் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் என்பது, முழுக்க சந்தையின் போக்கை பொறுத்ததாகும் என்றும், இதற்கும் நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் எம்.டி.என்.எல்., தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் 2,454 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து நிறுவனம், அதன் சொத்துக்களை விற்பனை செய்து, நிதி திரட்ட உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து, இப்பங்கின் விலை அதிகரித்து வருகிறது என்கிறார்கள், சந்தை நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|