பதிவு செய்த நாள்
29 டிச2021
02:33

ரத்தன் டாடா பிறந்த நாள்
‘டாடா’ குழுமத்தின் கவுரவ தலைவரான ரத்தன் டாடா, நேற்று தன்னுடைய 84வது பிறந்த நாளை கொண்டாடினார்.ரத்தன் டாடாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தொழிற்துறையினர், அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
வாராக் கடன் வங்கி
அரசால் துவக்கப்படும் வாராக் கடன் வங்கி, வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து செயல்படும் என தெரிகிறது.மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவுக்கு வரும் நிலையில், அதற்குள் வங்கிகள் அதன் ‘பேலன்ஸ் ஷீட்’டை சரிசெய்து கொள்வதற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது இடத்தில் வங்கதேசம்
இந்தியாவிலிருந்து அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் வரிசையில், நான்காவது இடத்தை, நடப்பு நிதியாண்டில் வங்கதேசம் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில், வங்கதேசம் 5 இடங்கள் முன்னேறி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
‘இன்டெல்’ நிறுவனத்துக்கு அழைப்பு மத்திய அரசு ‘செமிகண்டக்டர் சிப்’ தயாரிப்பதற்காக, 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்திட்டத்தை அறிவித்திருப்பதை, ‘இன்டெல் பவுண்டரி சர்வீசஸ்’ நிறுவனத்தின் தலைவர் ரந்திர் தாகூர் வரவேற்றிருக்கிறார்.இதயடுத்து, மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பதிலுக்கு, ‘இன்டெல் – வெல்கம் டு இந்தியா’ என ‘டுவிட்’ செய்து வரவேற்றுள்ளார்.
‘இக்ரா’வின் வளர்ச்சி கணிப்பு‘
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் 9 சதவீதமாக இருக்கும்’ என, உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ அறிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று குறித்த கவலைகளுக்கு இடையேயும், இந்தியா இந்த வளர்ச்சியை எட்டும் என்றும் இக்ரா தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|