பதிவு செய்த நாள்
29 டிச2021
22:14

புதுடில்லி:நுகர்வோரின் நலனை பாதுகாக்கும் வகையில், நேரடி விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பிரமிடு அல்லது பண சுழற்சி திட்டங்களில் ஈடுபடக்கூடாது என, புதிய தடையை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்த அறிவிப்பை நேரடி விற்பனை நிறுவனங்கள் பல வரவேற்று உள்ளன.அரசின் இந்த நடவடிக்கை, தெளிவை ஏற்படுத்தும் என்றும், சட்டபூர்வமான தன்மையை வழங்கும் என்றும் அவை தெரிவித்துள்ளன. மேலும், வரும் காலத்தில் அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளன.
இது குறித்து, ‘ஆம்வே, ஓரிபிளேம், மோடிகேர்’ போன்ற நிறுவனங்களை உறுப்பினராக கொண்ட, இந்திய நேரடி விற்பனை சங்கத்தின் தலைவர் ரஜத் பேனர்ஜி கூறியதாவது: இந்த நடவடிக்கை, பிரமிடு மற்றும் பண சுழற்சி திட்டங்களில் இருந்து, இந்த தொழிலையும் நுகர்வோர்களையும் பாதுகாக்கும். மேலும், நேரடி விற்பனை வணிகத்திற்கான சட்டப்பூர்வ நிலையையும் வழங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|