பதிவு செய்த நாள்
29 டிச2021
22:19

சென்னை:கொரோனா தாக்கத்துக்கு பிறகு, பழைய விமானங்களை பிரித்தெடுக்கும் தொழிலில், பல நிறுவனங்கள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன.இந்தியாவில், பழைய விமானங்களை பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவு.பெரும்பாலும் இத்தகைய பணிகள், வெளிநாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது இந்த நிலை மாறி, இந்த தொழிலில் உள்நாட்டை சேர்ந்த பல நிறுவனங்கள் ஈடுபட துவங்கி உள்ளன. இதுகுறித்து, ‘நானோ ஏவியேஷன்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாண்டியன் சோக்கு கூறியதாவது:கொரோனாவை முன்னிட்டு, அதிகளவு விமானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், இதன் பராமரிப்பு செலவும், நிறுத்தி வைப்பதற்கான செலவும் அதிகரித்துள்ளன.மேலும், மறு விற்பனை மற்றும் மறு குத்தகை விடுவதற்கான மதிப்பும் குறைந்துள்ளன.
இதன் காரணமாக, பழைய விமானங்களை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. பழைய விமானங்களை, 10 கோடி ரூபாய் முதல், 100 கோடி ரூபாய் வரையிலான விலைக்கு வாங்கி, அவற்றின் பாகங்களை தனித் தனியாக பிரித்து ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
நல்ல நிலையில் இருக்கும் உதிரி பாகங்கள், சான்றிதழ்களுடன் பிற விமானங்களில் பொருத்த அனுமதிக்கப்படுகின்றன.விமானங்களின் உதிரி பாகங்களை பிரித்தெடுத்து, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் துறைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.விமானங்களை பிரிக்கும் தொழிலால், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|