பதிவு செய்த நாள்
29 டிச2021
22:22

மேலும் ஒரு ‘யுனிகார்ன்
’‘குளோபல்பீஸ்’ நிறுவனத்தின் மதிப்பு, 1.1 பில்லியன் டாலராக அதாவது, 8,250 கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, இந்நிறுவனம் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது.ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தின் மதிப்பு, ஒரு பில்லியன் டாலராக உயரும்போது, அந்த நிறுவனம் யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக கருதப்படும்.
வருமான வரி தாக்கல்
கடந்த 28ம் தேதி நிலவரப்படி, கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 4.86 கோடியாக உயர்ந்து உள்ளது.கடந்த 28ம் தேதியன்று மட்டும், வருமான வரி தாக்கல் எண்ணிக்கை 18.89 லட்சமாக இருந்ததாக, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
‘டிஷ் டிவி’ ஆண்டு கூட்டம்
டி.டி.எச்., சேவையை வழங்கும் ‘டிஷ் டிவி’ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், இன்று நடைபெறுகிறது.டிஷ் டிவி புரமோட்டர்களான சுபாஷ் சந்திரா குடும்பத்தினருக்கும், அதிக பங்குகள் வைத்திருக்கும் ‘யெஸ் பேங்க்’ நிறுவனத்துக்கும் இடையேயான முட்டலில், இதற்குமுன் இருமுறை ஆண்டு கூட்டம் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
‘பஜாஜ் ஆட்டோ’வின் ஆலை
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘பஜாஜ் ஆட்டோ’, புனேவில் 300 கோடி ரூபாய் மதிப்பில், மின்சார வாகன ஆலையை அமைக்கிறது.ஏற்கனவே ஆலைக்கான பணிகள் துவங்கி விட்டன. இந்த ஆலை, ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, பஜாஜ் நிறுவன தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட்டில் ‘ரேமண்ட்’
ஜவுளி மற்றும் ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான ‘ரேமண்ட்’, ரியல் எஸ்டேட் வணிகத்துக்காக புதிதாக, ‘டென் எக்ஸ் ரியாலிட்டி’ எனும் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறது.இதற்காக இந்த புதிய நிறுவனத்தில், ரேமண்ட் 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|