தொழில்நுட்ப சாதனங்களில் ஆர்வம் மாறிவிட்ட மக்கள் மனநிலை தொழில்நுட்ப சாதனங்களில் ஆர்வம் மாறிவிட்ட மக்கள் மனநிலை ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
01:25

‘டெக் மகிந்திரா’ முதலீடு ‘
டெக் மகிந்திரா’ நிறுவனம், ‘அல்லிஸ் இந்தியா’ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை கையகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கும், பிற பசுமை முதலீடுகளுக்கும் 1,000 கோடி ரூபாய் ஒதுக்க டெக் மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக குழு அனுமதி வழங்கி உள்ளது.
எஸ்.பி.ஐ., பேடிஎம் கூட்டு
‘எஸ்.பி.ஐ., கார்டு’ நிறுவனமும், ‘பேடிஎம்’ நிறுவனமும், டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான ‘டோக்கனைசேஷன்’ திட்டத்துக்காக கைகோர்த்துள்ளன.இந்த கூட்டின் வாயிலாக, கார்டுதாரர்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என, எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஷ் டிவி கூட்டம்
‘டிஷ் டிவி’ நிறுவனத்தின் புரமோட்டர்களான சுபாஷ் சந்திரா குடும்பத்தினருக்கும், அதிக பங்குகள் வைத்திருக்கும் ‘யெஸ் பேங்’குக்கும் இடையான முட்டலில் இரண்டு முறை தள்ளிப்போன ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆன்லைனில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்கு முடிவுகள், மும்பை உயர்நீதிமன்ற அனுமதிக்கு பிறகே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.யு.எல்., பொருட்களுக்கு தடை
நுகர்பொருட்களுக்கான வினியோகஸ்தர்கள், இன்று முதல் எச்.யு.எல். நிறுவனத்தின் தயாரிப்புகளை மகாராஷ்ட்ராவில் விற்பனை செய்வதை நிறுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.ஆன்லைன் விற்பனையாளர்களுக்கும், பாரம்பரிய விற்பனையாளர்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் குறித்த பேச்சில், எச்.யு.எல் நிறுவனம் கலந்து கொள்ளாததால் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வினியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல்
கிட்டத்தட்ட 5.34 கோடிக்கும் அதிகமானோர், 2021-_ -22 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக, நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 30 தேதியன்று மட்டும், 27 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்களுக்கு அபராதம்

சீன மொபைல்போன் நிறுவனங்களான ‘ஷவ்மி, ஓபோ’ ஆகியவற்றுக்கு, வரி ஏய்ப்பு காரணமாக, 1,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிறுவனங்கள் சம்பந்தமாக, கடந்த டிசம்பர் 21ம் தேதியன்று, 11 மாநிலங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)