வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் முதல் வெள்ளி இ.டி.எப்., திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
19:35

புதுடில்லி:நாட்டின் முதல் வெள்ளி இ.டி.எப்., முதலீட்டு திட்டத்தை ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தங்க இ.டி.எப்., திட்டத்தை போல, வெள்ளியில் முதலீடு செய்வதற்கான வெள்ளி இ.டி.எப்., திட்டங்களை நடத்துவதற்கு அண்மையில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கியது. கடந்த நவம்பர் மாதத்தில் வெள்ளி இ.டி.எப்., குறித்த விதிமுறைகளையும் அது வகுத்து வெளியிட்டது.
இதனையடுத்து நாட்டில் முதல் முறையாக வெள்ளி இ.டி.எப்., திட்டத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இதற்கான புதிய பண்டு வெளியீடு, இம்மாதம் 5ம் தேதி துவங்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பண்டு வெளியீடு இம்மாதம் 19ம் தேதியுடன் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்டு, ஆதித்ய பிர்லா சன் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் உள்ளிட்ட பல பண்டு நிறுவனங்கள், வெள்ளி இ.டி.எப்., திட்டங்களை துவங்க செபியிடம் அனுமதி கோரியுள்ளன.
முதலீட்டாளர்கள் வெள்ளி கட்டிகள் அல்லது பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.இதன் வாயிலாக, வெள்ளியில் எளிதாக முதலீடுகளை மேற்கொள்ளவோ அல்லது முதலீடுகளை விற்று பணமாக்கிக் கொள்ளவோ முடியும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)