உங்கள் நிதி ஆரோக்கியம்  காப்பதற்கான தீர்மானங்கள்உங்கள் நிதி ஆரோக்கியம் காப்பதற்கான தீர்மானங்கள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
ஆயிரம் சந்தேகங்கள்: 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்'கில் இனிமேல் ஈடுபடக்கூடாதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2022
22:35

புத்தாண்டில் இருந்து, ஏ.டி.எம்., சேவையை ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் கூடுதல் ஆகிறதாமே?
அசோக் தாமஸ், மின்னஞ்சல்.
ஆமாம். ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். முன்னர் அது 20 ரூபாயாக இருந்தது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி இல்லாமல், இதர வங்கிகளின் ஏ.டி.எம்., சேவையை ஒரு மாதத்தில் 3 முறை பயன்படுத்தலாம். அனாவசியமாக ‘மினி ஸ்டேட்மென்ட்’ எடுப்பது போன்ற பரிவர்த்தனைகளை தவிருங்கள்.
மைக்ரோ ஏ.டி.எம்., வசதியையோ, ‘ஆதார் எனேபிள்டு பேமென்ட் சிஸ்டத்’தையோ பயன்படுத்தினால், இந்தக் கூடுதல் கட்டணம் இருக்காது. ஒரு சில ‘சிறப்பு வாடிக்கையாளரு’க்கு, ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்த, வங்கிகளே கூடுதல் வாய்ப்பும் அளிக்கின்றன. இத்தகைய கட்டுப்பாடுகள் எல்லாம், ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நோக்கி நம்மை நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால், ஆட்டோக்காரர் கூட, ‘கேஷா?’ என்று கேட்டு தான் சவாரிக்கே வருகிறார். இருதலைக்கொள்ளி எறும்பாக தவிப்பது மத்தியமர்களே.
நான் கொடுத்த 15 லட்சம் ரூபாயை கொண்டு என் அம்மா, ‘மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு’ ஒன்றை துவக்கினார். அதற்கான வரி யாருடைய பெயரில் விதிக்கப்படும்? அவர் பெறும் மாத வட்டி தொகைக்கு யார் பெயரில் வரி விதிக்கப்படும்?
விமலா, மின்னஞ்சல்.
உங்கள் தாயாருக்கு நீங்கள் கொடுத்த பணம் ‘பரிசு’ என்று எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு அவர் வரி செலுத்த தேவை இல்லை. அவர் அந்த தொகையைத் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்து, படிவம் 15ஜி அல்லது 15எச்., கொடுத்தால், டி.டி.எஸ்., பிடித்தம் இருக்காது. உங்களுக்கு எந்த வரியும் வராது.
என் வாடிக்கையாளர் ஐ.டி.,யோடு யாரோ ஒருவரது பர்சனல் லோன் இணைக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்து, உரிய அதிகாரிக்கு தெரிவித்து, தொடர் முயற்சிக்கு பின்னர் நீக்கினேன். இதற்கே 2 மாதங்கள் ஆயிற்று. வங்கி செய்த தவறை, வங்கித் துறை தீர்வாணையருக்கு புகாராக அனுப்பட்டுமா?
பி.ஜெயாசங்கர், மின்னஞ்சல்.
பிரச்னை தான் தீர்ந்துவிட்டதே, எடுப்பதற்கு எந்த மேல் நடவடிக்கையும் இல்லை என்றே தீர்வாணையம் கருதக்கூடும். இந்தத் தவறில், ஒரு குறிப்பிட்ட நபரோ, நபர்களோ சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்களைப் பற்றி வங்கியின் மனிதவளத் துறைக்கு புகார் கொடுங்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது நமக்குச் சொல்லப்படாது. ஆனால் குறைந்தபட்சம், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள, அந்த வங்கி ஏதேனும் முயற்சி எடுக்கும்.
அரசாங்கம் மாதிரி பொதுத் துறை வங்கிகளும் நம் வரிப் பணத்தில் நடப்பவை; அங்கே பணியாற்றுவோர் நமக்கான சேவகர்கள். தவறுகளைக் களைந்து, வங்கித் துறையை நல்வழிப்படுத்துவதும் நம் கடமை தான்; செய்யுங்கள்.
என் மகன் மதுரையில் வசித்தபோது, அங்கிருந்த விலாசத்தை கொண்டு ஆதார் அட்டை வாங்கி, வங்கிக் கணக்கு, எல்.ஐ.சி., பாலிசி, அஞ்சலக கணக்குகளை துவங்கினார். தற்போது மேற்படி கணக்குகளை பெங்களூரு வீட்டு விலாசத்திற்கு மாற்ற விரும்புகிறார். இதற்கு ஆதாரில் விலாசத்தை மாற்ற வேண்டுமா? சில வங்கி, அஞ்சலக கணக்குகள், ‘இ’ அல்லது ‘எஸ்’ கணக்காக உள்ளது. ஒன்றில் மதுரை விலாசம், மற்றொன்றில் பெங்களூரு விலாசம் இருக்கலாமா?
மோகன் எம்.ஆர்., மதுரை.
ஆமாம், ஆதாரில் முகவரி மாற்ற வேண்டும். பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஆதார் அட்டை அடிப்படையிலேயே விபரங்களை சரிபார்க்கின்றன. ‘இ’ அல்லது ‘எஸ்’ கணக்கில் இருவரது முகவரியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் மகன் தான் இந்தக் கணக்குகளை நிர்வகிக்கப் போகிறார் என்றால், எல்லா ஆவணங்களிலும் அவரது முகவரி இருப்பதே சரியானது.\
இனிமேல் ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’கில் ஈடுபடக் கூடாதா?
ரமணி சுந்தர், சேத்துப்பட்டு.
ஆமாம். 2015ம் ஆண்டிலேயே, பொதுமக்கள் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கவர்ச்சியில் விழக் கூடாது; அது அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்று ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. தற்போது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், 2021 நுகர்வோர் பாதுகாப்பு – நேரடி விற்பனை – சட்டத்தின் மூலம், மல்டி லெவல் மார்க்கெட்டிங், பிரமிட் திட்டம், பணச் சுழற்சித் திட்டங்கள் ஆகியவற்றை தடை செய்துஉள்ளது.
அதாவது, பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் நேரடி முகவராக பதிவு செய்து கொண்டு பணியாற்றலாம். ஆனால், ஒருவருக்கு கீழே நான்கு பேர், அவர்களுக்கு கீழே இன்னும் டவுன் லைன் என்றெல்லாம் டுபாக்கூர் ஏமாற்றல்கள் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய தடை இது. இப்போதேனும் வந்ததே!
வங்கியில் பிக்சட் டிபாசிட் போடுபவர்கள் யாராக இருந்தாலும், அதில் கிடைக்கும் வட்டி, 50 ஆயிரத்துக்கு மேல் போனால் வரி கட்ட வேண்டும் என்கிறது அரசாங்கம். இதில் பாவப்பட்ட மூத்த குடிமக்களுக்கு எந்தச் சலுகையும் காட்டாதது அநியாயம் தானே?
வைகை வளவன், மதுரை.
என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? 60 வயதுக்குட்பட்டவர்கள் ஈட்டும் வைப்பு நிதி வட்டிக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை தான் விலக்கு. மூத்த குடிமக்களுக்குத் தான் 50 ஆயிரம் ரூபாய். அது மட்டுமா? மற்றவர்களுக்கு அடிப்படை வரிவிலக்கு 2.5 லட்சம் என்றால், மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய். மிக மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை விலக்கு. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல், ஓராண்டில் ஒருவர் வரி செலுத்த வேண்டியிருந்தால், அதை அட்வான்ஸ் வரியாகச் செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு இதில் இருந்து விலக்கு. மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தில் மற்றவர்களுக்கு கிடைக்கும் கழிவு 25 ஆயிரம் என்றால், மூத்தோருக்கு 50 ஆயிரம். ரயிலில் போனால், கட்டணத்தில் சலுகை; வங்கியில் சேமித்தால், கூடுதலாக அரை சதவீத வட்டி; அஞ்சலகத்திலோ சூப்பரான சேமிப்புத் திட்டங்கள். சீக்கிரம் 60 வயது ஆகாதா என்ற ஏக்கமே வருகிறது சார்! மூத்தோரை உள்ளங்கையில் தாங்கும் நாடு, இந்தியா!
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
pattamvenkatesh@gmail.com ph98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)