வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  தொடரும் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி தொடரும் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
09:34


புதுடில்லி : கடந்த 2021ம் ஆண்டில், நாட்டில் உள்ள முக்கியமான 7 நகரங்களில், வீடுகள் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 71 சதவீதம் அதிகரித்துள்ளது என, மும்பையைச் சேர்ந்த சொத்து ஆலோசனை நிறுவனமான ‘அனராக்’ தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும், 86 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மேலும் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த 2020ம் ஆண்டில், 1.38 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியிருந்த நிலையில், 2021ல், 2.37 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 71 சதவீத வளர்ச்சியாகும்.இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய ஆண்டான 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 10 சதவீதம் குறைவாகவே விற்பனை ஆகிஉள்ளது.
கடந்த ஆண்டில் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தது, தேவை அதிகரித்திருந்தது, பத்திரப் பதிவு கட்டணம் சில மாநிலங்கள் குறைக்கப்பட்டது, கட்டுமான நிறுவனங்களின் சலுகைகள் அறிவிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன.மேலும், பண்டிகை கால விற்பனையும் ஒரு முக்கிய காரணமாகும்.
கடந்த ஆண்டில், மும்பையில் 72 சதவீதமும், டில்லி தலைநகர் பிராந்தியத்தில் 73 சதவீதமும் விற்பனை அதிகரித்து உள்ளது.சென்னையை பொறுத்தவரை 86 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால் பெங்களூரில் 33 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி காணப்பட்டு உள்ளது.நடப்பு ஆண்டில் விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய நிலையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)