பதிவு செய்த நாள்
09 ஜன2022
01:22

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு, சந்தையில் அதிகரித்துள்ளது.
உலகளவிலான தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ.,வும், இதை உறுதி செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதோடு, ரிலையன்ஸ் ஜியோவை தனியாக பட்டியலிடும் முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எல்.எஸ்.ஏ., அதன் அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோவின் வணிக மதிப்பு 7.32 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. இதில், ‘ஜியோ பைபர்’ உள்ளிட்டவையும் அடங்கும். தற்போது புதிய பங்கு வெளியீட்டுக்கான வரவேற்பு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் இருப்பதால், இந்த சமயத்தில் ஜியோ வருவது அதிக நிதி திரட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும் சி.எல்.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|