பதிவு செய்த நாள்
09 ஜன2022
19:34

இந்தியாவில் இந்த ஆண்டு மின் வாகனங்கள் விற்பனை 10 லட்சத்தை தொடும் என்றும், இரு சக்கர மின் வாகனங்களின் பங்கு கணிசமாக இருக்கும் என்றும் மின் வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
சுற்றுச்சூழல் நலன் போன்ற காரணங்களால் மின் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு 10 லட்சம் மின் வாகனங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாக, மின் வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளில் விற்பனையான மொத்த மின் வாகனங்களின் எண்ணிக்கைக்கு நிகரானது.
கடந்த ஆண்டு மின் வாகனங்களின் விற்பனையை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இரு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் விற்பனை, ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விற்பனை போக்கின் அடிப்படையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் மின் வாகனங்கள் பங்கு, 30 சதவீதமாக அமையும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இ – -ஸ்கூட்டர், இ- – பைக்’ மற்றும் ‘இ- – சைக்கிள்’ ஆகிய பிரிவுகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|