ஆக்சிஸ் வங்கியின் இளம் வங்கியர் திட்டம்ஆக்சிஸ் வங்கியின் இளம் வங்கியர் திட்டம் ...  நுகர்பொருள் சாதன விலை 5 – 10 சதவீதம் அதிகரிக்கும்? நுகர்பொருள் சாதன விலை 5 – 10 சதவீதம் அதிகரிக்கும்? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மோட்டார் சைக்கிள் பிரிவில் முதன் முதலாக டூயல் டோன்களை அறிமுகப்படுத்தும் டிவிஎஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2022
22:54

உலகின் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது டிவிஎஸ் ரேடியான் வாகனத்தை 'ரெட் & பிளாக்' மற்றும் 'ப்ளூ & ப்ளாக்' ஆகிய இரண்டு புத்தம் புதிய டூயல் டோன் வண்ணங்களில் அறிமுகப்படுத்துகிறது.

இந்க வண்ணக் கலவை க்ளாசிக் மோட்டார் சைக்கிளிங் உலகின் உத்வேகமளிக்கும் வண்ணக்கலவைகளினால் ஈர்க்கப்பட்டு அசத்தலான தோற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் வாகனப் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு டூயல் டோன் விருப்பங்களை அறிமுகப்படுத்தும் முதல் மோட்டார் சைக்கிள் டிவிஎஸ் ரேடியான் என்பது குறிப்பிடத்தக்து.

2018-ல் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலிருந்து டிவிஎஸ் ரேடியான் தனது அபாரமான செயல்திறன், இவ்வாகனப் பிரிவிலேயே மிகச் சிறப்பான அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அட்டகாசமான வடிவமைப்புகளால் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.

டிவிஎஸ் ரேடியான் வாகனம் அடுத்த தலைமுறை இகோ த்ரஸ்ட் ப்யூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் தருவதுடன் மேம்படுத்தப்பட்ட என்ஜின் செயல்திறன், நீடித்து உழைக்கும் மிகச்சிறப்பான ஆயுள் மற்றும் மனதிற்கு இதமான உணர்வளிக்கும் செளகரியமான சவாரி அனுபவத்தை வழங்குகிறது. இந்த மோட்டார் சைக்கிள் உறுதியான உலோக வடிவமைப்புடன் கம்பீரமான ஸ்டைல் மற்றும் சொகுசு வசதியுடன் சந்தையில் கிடைக்கிறது. டிவிஎஸ் ரேடியான் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மேக் டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.64,597 மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மேக் டிஸ்க் பிரேக் வகை டூயல் டோன் பதிப்பு ரூ.71,557 விலையில் கிடைக்கிறது.

டிவிஎஸ் ரேடியான் பைக்குகள் டூயல் டோன், ப்ரீமியம் க்ரோம் ஹெட் லேம்ப், புதிய க்ரோம் ரியர் வியூ கண்ணாடிகள், ப்ரீமியம் டேஷ்போர்ட், புதிய முன் டிஸ்க் பிரேக்குகள், புதிய வலுவான தை பேட் வடிவமைப்பு மற்றும் நீண்ட பயணத்திற்கு அசதியில்லாத ப்ரீமியம் குஷன் இருக்கை, க்ரோம் ஷ்ரவுட்களுடன் கூடிய மிக வலுவான பின்புற சஸ்பென்ஷன், டியூரா க்ரிப் டயர்களுடன் கூடிய 18’’ பெரிய சக்கரங்கள், சரியான உயரத்தில் .வடிவமைக்கப்பட்டிருக்கும் இருக்கை, மேடு பள்ளங்களில் சுலபமாக செல்ல உதவும் அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், நீண்ட வீல்-பேஸ் மற்றும் யூ.எஸ்.பி சார்ஜிங் ஸ்பாட், செளகரியமான ஆல் கியர் செல்ப்-ஸ்டார்ட், பீப்பருடன் கூடிய சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் மற்றும் பில்லியன் கிராப் ரெயில் போன்ற அற்புதமான புதிய அம்சங்களை அதிக அளவில் கொண்டுள்ளது என டிவிஎஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)