பதிவு செய்த நாள்
11 ஜன2022
11:18
புதுடில்லி : புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டுவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு, ‘கோர்ஸ் 5 இன்டெலிஜென்ஸ்’ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான கோர்ஸ் 5 இன்டெலிஜென்ஸ், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மீதி 300 கோடி ரூபாயை, நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக திரட்டப்பட உள்ளதாக, ‘செபி’க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘லெனோவா, கோல்கேட் பாமோலிவ், அமெரிக்கன் ரீஜன்ட்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
பைன் லேப்ஸ்:
இதற்கிடையே, இந்தியாவை சேர்ந்த ‘பைன் லேப்ஸ்’ எனும் நிதி தொழில்நுட்ப நிறுவனம், 3,700 கோடி ரூபாயை திரட்டும் வகையில், அமெரிக்க சந்தையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. கடந்த வாரம் எஸ்.பி.ஐ., இந்நிறுவனத்தில், 150 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|