பதிவு செய்த நாள்
11 ஜன2022
11:20
வேலை வாய்ப்பு அதிகரிப்பு
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் வேலைவாய்ப்பு 3.10 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வேலைவாய்ப்பு 3.08 கோடியாக இருந்தது என தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி கணிப்பு குறைப்பு
அடுத்த நிதியாண்டுக்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணிப்பை, திருத்தி அறிவித்துள்ளது, ‘சிட்டி’ தர நிர்ணய நிறுவனம்.இந்நிறுவனம், இதற்கு முன் 9.8 சதவீதம் என கணித்திருந்த நிலையில், ஒமைக்ரான் அச்சம் காரணமாக, 9 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
டி.சி.எஸ்., பங்கு விலை
டி.சி.எஸ்., நிறுவனம், அதன் பங்குகளை திரும்ப பெறுவது குறித்த முடிவை, நிறுவனத்தின் நிர்வாக குழு நாளை எடுக்க உள்ள நிலையில், அதன் பங்குகள் விலை நேற்று அதிகரித்தது.நேற்றைய வர்த்தகத்தின் இடையே, இந்நிறுவன பங்குகள் விலை, கிட்டத்தட்ட 3.24 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 3,980 ரூபாயை தொட்டது.
அறுபது லட்சமாவது வாகனம்
‘சுசூகி மோட்டார் சைக்கிள்’ நிறுவனம், அதன் 60 லட்சமாவது வாகனத்தை, குருகிராம் ஆலையில் தயாரித்து வெளியிட்டுள்ளது.சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் துவங்கி, நடப்பு ஆண்டுடன் 15 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை 60 லட்சம் வாகனங்களை தயாரித்துள்ளது.
‘மாருதி சுசூகி’ சாதனை
கடந்த 2021ம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட, ‘டாப் – 10’ பயணியர் வாகனங்களில், 8 மாடல் வாகனங்கள் ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். ஓராண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட, டாப் – 10 பயணியர் வாகனங்களில், 8 வாகனங்கள் மாருதியை சேர்ந்ததாக இருப்பது என்பது, இதுவே முதன் முறையாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|