வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ... முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரின் வளர்ச்சி குறித்த கணிப்பு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரின் வளர்ச்சி குறித்த கணிப்பு ...
வட்டி பாக்கிக்குப் பதிலாக பங்குகள் கடனை சமாளிக்க வோடபோனின் ‘ஐடியா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
22:01

புதுடில்லி:கடனில் சிக்கி தவிக்கும், ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டி நிலுவை தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக, அதன் 35.8 சதவீத பங்குகளை வழங்க உள்ளது.இந்த திட்டம் நடைபெறுமானால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக மத்திய அரசு இருக்கும்.

அனுமதி
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம், கடந்த 10ம் தேதியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுக்கு செலுத்த வேண்டிய 16 ஆயிரம் கோடி ரூபாயை பங்குகளாக மாற்றி வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தொலைதொடர்பு துறை ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், திட்டத்தை வோடபோன் ஐடியா நிறைவேற்றும் முயற்சியில் இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன், கிட்டத்தட்ட 1.95 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இதில்,ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் உள்ளிட்டவை 1.09 லட்சம் கோடி ரூபாய்.சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கடன் 64 ஆயிரத்து, 400 கோடி ரூபாய். வங்கி மற்றும் நிதி நிறுவன கடன்கள் 22 ஆயிரத்து, 770 கோடி ரூபாய்.
அரசுக்கு இலவசம்
இந்நிலையில், அரசுக்கு வழங்க வேண்டிய வட்டி பாக்கிக்காக, ஒரு பங்கின் விலை 10 ரூபாய் என நிர்ணயித்து கொடுக்க திட்ட மிட்டுள்ளது. இதற்கு தொலை தொடர்பு துறை ஒப்புக்கொள்ள வேண்டும்.இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, மும்பை பங்குச் சந்தையில் 11.80 ரூபாயாக உள்ளது.அரசுக்கு 35.8 சதவீத பங்குகள் செல்லும்பட்சத்தில், அதன் வசம் அதிக பங்குகள் இருக்கும். வோடபோன் குழுமத்திடம் 28.5 சதவீத பங்குகளும், ஆதித்ய பிர்லா குழுமத்திடம் 17.8 சதவீத பங்குகளும் இருக்கும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, தங்களிடம் உள்ள பங்குகளை அரசுக்கு இலவசமாகவே தர தயாராக இருப்பதாக அறிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தின் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக மத்திய அரசு மாறும். அரசின் வசம் 38.5 சதவீத பங்குகள் வரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய பாலிசி பெற, மூன்று மாதம் காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக ... மேலும்
business news
மும்பை:கடந்த ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளில், சாதனை அளவாக 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ... மேலும்
business news
திருப்பூர்:கடந்த ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து 82 ஆயிரத்து, 653 கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)