சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம் சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம் ...  ‘வோடபோன் ஐடியா’வின் திட்டம் மத்திய அரசு ஏற்க மறுப்பு ‘வோடபோன் ஐடியா’வின் திட்டம் மத்திய அரசு ஏற்க மறுப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
21:00

கெட்ட நேரமே காரணம்

‘பேடிஎம்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு தோல்வியை தழுவியதற்கு காரணம், கெட்ட நேரமே என அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ‘ஒன் 97 கம்யூனிகேஷன்’ பங்குகள் விலை, தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘விப்ரோ’ லாபத்தில் மாற்றமில்லை

‘விப்ரோ’ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல், 2,969 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனம் 2,968 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

பங்கு விலக்கல் நிறுத்தம்

பொதுத்துறையைச் சேர்ந்த ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை, அதிகம் அறிந்திராத ‘நந்தால் பைனான்ஸ் அண்டு லீசிங்’ நிறுவனத்துக்கு வழங்க உள்ளதை எதிர்த்து, தொழிலாளர்கள் சங்கம் நீதிமன்றம் சென்றதை அடுத்து, பங்கு விலக்கலை நிறுத்தி வைத்துள்ளது, மத்திய அரசு.

ஐ.ஐ.பி.,1.4 சதவித வளர்ச்சி

நாட்டின் தொழில்துறை உற்பத்தி, கடந்த நவம்பர் மாதத்தில், 1.4 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடான ஐ.ஐ.பி., தரவுகளின்படி, தயாரிப்பு துறை உற்பத்தி, நவம்பரில் 0.9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பங்கு வெளியீடு

ஹைதராபாதைச் சேர்ந்த ஆர்கானிக் உணவு நிறுவனமான, ‘சிரேஷ்டா நேச்சுரல் பயோபுராடெக்ட்ஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக, அதன் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

‘இன்போசிஸ்’ லாபம் அதிகரிப்பு

‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 11.8 சதவீதம் அதிகரித்து, 5,809 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் வருவாய் வளர்ச்சி கணிப்பை, 19.5_20 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)