சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு ... அதிக பலன் தரும் வீட்டு மனை முதலீடு அதிக பலன் தரும் வீட்டு மனை முதலீடு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
குடியிருப்பு மனைகளின் விலை சராசரியாக 7 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
21:04

புதுடில்லி:குடியிருப்பு மனைகளின் விலை, ஆண்டுதோறும், சராசரியாக 7 சதவீதம் அதிகரித்து வருவதாக, ரியல் எஸ்டேட் இணையதளமான ‘ஹவுஸிங் டாட் காம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டில் உள்ள முக்கியமான எட்டு நகரங்களில், கடந்த 2015ம் ஆண்டிலிருந்து, குடியிருப்பு மனைகளின் விலை, ஆண்டுதோறும் சராசரியாக 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 2 சதவீத அளவுக்கே அதிகரித்துள்ளது.
முதலீடு என்பதை பொறுத்தவரை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்வதை விட, குடியிருப்பு மனைகளில் செய்யப்படுவது, அதிக லாபம் தருவதாக, தொடர்ந்து இருந்து வருகிறது. வீட்டு மனைகள், கடந்த 2015ம் ஆண்டிலிருந்து அதிக மூலதன வருவாயை ஈட்டி தருவதாக உள்ளது.
மேலும், கொரோனா பாதிப்புகளுக்கு பின், அடுக்குமாடி குடியிருப்புகளை விட, தனிப்பட்ட வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், பெரிய நகரங்களில் இத்தகைய இடங்கள் அதிகம் இல்லை.அதேசமயம் பாதுகாப்பு, பொது வசதிகள் ஆகியவற்றுக்கான வாய்ப்பு, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பதால், பெரும்பாலானோர் அதை விரும்புகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தென்பகுதியில் உள்ள மாநிலங்களில், 2018ம் ஆண்டுக்கு பின், குடியிருப்பு மனைகளின் விலை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 2 முதல் 6 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி பெற்றுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
குடியிருப்புகளில் வீடு வாங்கி முதலீடு செய்வதை விட, வீட்டு மனை வாங்குவது அதிக பலன் தருவதாக அமைவதாக ஆய்வில் ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த 2021ம் ஆண்டில், நாட்டில் உள்ள முக்கியமான 7 நகரங்களில், வீடுகள் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ... மேலும்
business news
மேலும் ஒரு ‘யுனிகார்ன்’‘குளோபல்பீஸ்’ நிறுவனத்தின் மதிப்பு, 1.1 பில்லியன் டாலராக அதாவது, 8,250 கோடி ரூபாயாக ... மேலும்
business news
ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அலுவலக குத்தகை மற்றும் மால்கள் பிரிவில் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை, அடுத்த ஆண்டில் 5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘நைட் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Nagarajan Jayakumar - Abu Dhabi,United Arab Emirates
13-ஜன-202213:06:27 IST Report Abuse
Nagarajan Jayakumar Over long term mutual funds are giving 10% to 15% return per year. So which one will grow faster over the next 20 years. Unfortunately many Indians seem to believe in real estate rather than mutual funds. To learn more about mutual funds please visit Mutual Funds Guide In Tamil by N Jayakumar. Thanks
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)