பதிவு செய்த நாள்
13 ஜன2022
21:28
‘பிளிப்கார்ட்’ வசமானது ‘யந்த்ரா’
‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிளிப்கார்ட்’, மின்னணு மறு வர்த்தக நிறுவனமான, ‘யந்த்ரா’வை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவில், மறு வர்த்தக வணிகத்தை மேம்படுத்த, இந்நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள பிளிப்கார்ட், அதற்கான தொகையை மட்டும் குறிப்பிடவில்லை.
டாடா உலக விற்பனை
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், கடந்த டிசம்பர் காலாண்டில், அதன் மொத்த உலக விற்பனை, 2 சதவீதம் அதிகரித்து, 2.9 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.இருப்பினும், அதன் உலகளவிலான பயணியர் வாகன விற்பனை, மூன்று சதவீதம் சரிவை கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தீவிரம் காட்டும் எல்.ஐ.சி.,
எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக இந்த மாத இறுதியில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பிக்கும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, வரும் மார்ச் மாத வாக்கில் எல்.ஐ.சி., தன்னுடைய பங்குகளை சந்தையில் பட்டியலிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு ஏற்படும்
மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பு துறை, நடப்பு நிதியாண்டில், 15–17 சதவீத வருவாய் இழப்பை சந்திக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு, ‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் தொடரும் சிரமம், இரு சக்கர வாகன தேவை குறைந்துள்ளது ஆகியவை காரணமாக, வருவாய் குறையும் என தெரிவித்துள்ளது.
புதிய பங்கு வெளியீடு
‘ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும் 19ம் தேதி துவங்கி, 21ம் தேதியன்று முடிவடைய உள்ளது.இந் நிறுவனம், துவக்கத்தில் 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது, அதை 680 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|