பதிவு செய்த நாள்
18 ஜன2022
21:11

புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த வாரம், ‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை அதிகரித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது.இந்நிறுவனம், சராசரியாக 0.9 சதவீதம் அளவுக்கு விலையை அதிகரித்து உள்ளது.
வாகன தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரித்திருப்பதை அடுத்து, அதை ஓரளவு சமன் செய்யும் விதத்தில், தற்போது விலையை அதிகரித்துள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், மாடல்களை பொறுத்து, விலை உயர்வு இருக்கும் என்றும்; சராசரி விலை உயர்வு 0.9 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
அத்துடன், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை அறிந்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை 10 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.ஏற்கனவே நேற்று வரை பதிவு செய்திருக்கும் வாகனங்களுக்கு இந்த புதிய விலை உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|