‘ஆட்வெர்ப் டெக்’ நிறுவனத்தில்  ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ முதலீடு ‘ஆட்வெர்ப் டெக்’ நிறுவனத்தில் ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ முதலீடு ...  எச்சரிக்கையாக இருக்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தல் எச்சரிக்கையாக இருக்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ‘சேடக் எலக்ட்ரிக்’ ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
11:46

உலக அளவில் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் மதிப்புமிக்க முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் ஆட்டோ தற்போது தனது புதிய ‘சேடக் எலக்ட்ரிக்’ ஸ்கூட்டருக்கான முன்பதிவை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் துவக்கி உள்ளது. கோவை, மதுரை நகரங்களில் உள்ள கேடிஎம் ஷோரூமில் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது; சோதனை முறையில் ஓட்டிப் பார்க்கும் வசதியும் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஸ்கூட்டரை இந்நிறுவனத்தின் www.chetak.com என்ற இணையதளத்தில் 2 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளைய பசுமையான மற்றும் தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களுக்கான பராமரிப்பு சேவை என்பது 12 ஆயிரம் கிலோ மீட்டர் அல்லது ஒரு ஆண்டுக்கு பிறகு என்றும், இதற்கான பேட்டரி உத்தரவாதமானது 3 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் நிர்ணயித்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்கள் இண்டிகோ மெட்டாலிக், வெலுட்டோ ரோஸ்ஸோ, புரூக்ளின் பிளாக் மற்றும் ஹேசல்நட் ஆகிய 4 கண்களை கவரும் வண்ணங்களில் வெளிவருகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1,48,279 ரூபாய் ஆகும். 5 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் திறன் கொண்டது மற்றும் வேக சார்ஜ் முறையில் 60 நிமிடத்தில் 25 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டர் ஸ்டீலில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபி67 தொழில்நுட்பமானது தண்ணீரால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கிறது. புதிய அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராகேஷ் ஷர்மா கூறுகையில், "சேடக் ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இது கோவை, மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேடக் 'நாளை நமது' – என்னும் உற்சாகமான தாரக மந்திரத்துடன் சிறப்பான எதிர்காலத்தை உங்களுக்கு வழங்கும். ஏற்கனவே முன் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கான வினியோகம் இந்த மாதத்தில் துவங்க உள்ளது" என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)