ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் 27ல் ஒப்படைப்பு ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் 27ல் ஒப்படைப்பு ...  பொருளாதாரம் அழகாக மீண்டுள்ளது அரவிந்த் பனகாரியா பாராட்டு பொருளாதாரம் அழகாக மீண்டுள்ளது அரவிந்த் பனகாரியா பாராட்டு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
09:49


கார்கள் போக்குவரத்து சரிவு
மால்களில் கார்களின் போக்குவரத்து 50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக, ‘கார் ஆப் பார்க் பிளஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பெருநிறுவன பகுதிகளிலும் கார்கள் போக்குவரத்து 36_45 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாகவும் அதன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூகுள் புதிய உலகம்
இணைய சேவை நிறுவனமான கூகுள், நடப்பு ஆண்டின் பிற்பாதியில், புனேவில் புதிய அலுவலகம் ஒன்றை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இன்னொருபக்கம் அதன் குருகிராம், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில், பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறைகளும் துவங்கி உள்ளது.

மின்சார வாகனங்களுக்கு சலுகை
மின்சார வாகனமயமாக்கலுக்கு, ‘பேம் 2’ திட்டத்தின் கீழ், மானியங்கள், வரி சலுகைகள் ஆகியவை மிகவும் முக்கியம் என, ஏத்தர் எனர்ஜி தெரிவித்துள்ளது. ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனத்தின் பின்னணியில் செயல்படும் ஏத்தர் எனர்ஜி, நுகர்வோர் தேவை அதிகரிக்க, இந்த சலுகைகள் மிகவும் அவசியமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பங்கு வெளியீட்டில் ‘டிரீம்போல்க்ஸ்’
‘டிரீம்போல்க்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது. விமான சேவைகளுக்கான தளமாக செயல்பட்டு இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில், முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆக்சிஸ் லாபம் அதிகரிப்பு
கடந்த டிசம்பருடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஆக்சிஸ் வங்கியின் நிகரலாபம், மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 3,614 கோடி ரூபாய் நிகர லாபத்தை, இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. கடன் வழங்குவது அதிகரித்த காரணத்தினாலும், சொத்து மதிப்புகள் கூடியதாலும், இந்த லாபத்தை இவ்வங்கி ஈட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)