பதிவு செய்த நாள்
27 ஜன2022
21:45

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் நலன்களை மேலும் பாதுகாக்கும் நோக்கில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ விதிமுறைகளை வலுவாக்கி உள்ளது.மியூச்சுவல் பண்டின் பெரும்பாலான டிரஸ்டிகள், ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தை முடிக்க முடிவு செய்யும்போது, முதலீட்டாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட மாற்றங்களை செபி மேற்கொண்டுள்ளது.
புதிய விதிமுறையின் படி, ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தை நிறுத்திவிடும் முடிவுக்கு பெரும்பாலான டிரஸ்டிகள் வந்துவிட்டாலும், மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களின் அனுமதியையும் பெற வேண்டியதிருக்கும்.ஒரு யூனிட்டுக்கு ஒரு வாக்கு எனும் விகிதத்தில் கணிப்பை நடத்தி, பெரும்பான்மை முடிவை பொறுத்து, திட்டத்தை நிறுத்துவது அல்லது தொடர்வது எனும் முடிவை எடுக்க வேண்டும். வாக்கு சேகரிப்பு முடிந்த 45 நாட்களுக்குள்ளாக, அதன் முடிவுகளை தெரிவிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூலையில், உச்ச நீதிமன்றம், மியூச்சுவல் பண்டு திட்டத்தை நிறுத்த, முதலீட்டாளர்களின் ஒப்புதலும் தேவை என தெரிவித்ததன் அடிப்படையில், இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது செபி.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|