வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  தள்ளிப் போகிறது பி.பி.சி.எல்., விற்பனை தள்ளிப் போகிறது பி.பி.சி.எல்., விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஏற்ற, இறக்கங்களில் பயணித்த ஜனவரி மாத வாகன விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2022
22:02

புதுடில்லி:பயணியர் வாகன மொத்த விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஜனவரியில், பல நிறுவனங்கள் வளர்ச்சியையும் சில நிறுவனங்கள் சரிவையும் கண்டுள்ளன.

செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு, தொற்று காரணமாக பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி:

நாட்டின் மிகப் பெரிய பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் விற்பனை, ஜனவரியில் 4 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இம்மாதத்தில் இந்நிறுவனம், மொத்தம் 1.54 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், 1.61 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.
டொயோட்டா கிரிலோஸ்கர்:

இந்நிறுவனம், ஜனவரியில் 34 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் உள்நாட்டில், 11 ஆயிரத்து 126 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில், மொத்தம் 7,328 வாகனங்களையே விற்பனை செய்துள்ளது.
ஹோண்டா கார்ஸ்:

இந்நிறுவனத்தின் விற்பனை, 3 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருக்கிறது. இந்நிறுவனம், கடந்த ஜனவரியில் 12 ஆயிரத்து 149 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சில மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளால் விற்பனை பாதிக்கப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்:

பல நிறுவனங்கள் சரிவைக் கண்டிருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் விற்பனை, 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 59 ஆயிரத்து 866 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரியில் 76 ஆயிரத்து 210 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
இதேபோல், ‘மகிந்திரா அண்டு மகிந்திரா, எம்.ஜி., மோட்டார் இந்தியா, நிஸான் இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. மாறாக, ‘ஹூண்டாய் இந்தியா’ நிறுவனம் 11 சதவீத விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
இரு சக்கர வாகனம்
இருசக்கர வாகன பிரிவில், ‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனத்தின் விற்பனை, 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இந்நிறுவனம், மதிப்பீட்டு மாதத்தில் 2.67 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனமும் 15 சதவீத சரிவைக் கண்டுள்ளது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு ஜனவரியில் 4.25 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரியில் 3.63 லட்சம் வாகனங்களையே விற்பனை செய்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)