வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  எல்.ஐ.சி., பங்கு வெளியீடு பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி எல்.ஐ.சி., பங்கு வெளியீடு பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
21:32

பிரபல தம்பதி முதலீடுபிரபல நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் அவரது கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோஹ்லி ஆகியோர், ‘புளூ டிரைப்’ எனும் நிறுவனத்தில், முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். பார்வைக்கு இறைச்சியை போன்ற தாவர உணவை தயாரித்து வழங்கும் இந்நிறுவனத்தில், எவ்வளவு ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
நாட்டின் சர்க்கரை ஏற்றுமதிகடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி30.68 லட்சம் டன் உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.2021 – -22 சந்தைப்படுத்தல் ஆண்டில், இதுவரை, அரசு மானியம் இல்லாமல் 46 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ஆலைகள்ஒப்பந்தம் செய்துள்ளன.
டி.வி.எஸ்., லாபம் சரிவு
கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தமூன்றாவது காலாண்டில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 18 சதவீதம் சரிந்து, 237 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த காலாண்டில், இருசக்கர வாகன விற்பனை சரிவை கண்டதை அடுத்து, நிறுவனத்தின் நிகர லாபமும் சரிவை கண்டுள்ளது.
பிரீமியம் வருவாய் அதிகரிப்பு
கடந்த ஜனவரியில், அனைத்து ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களின் புதிய வணிக பிரீமியம் வருவாய், 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது.மொத்தம் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து, 21 ஆயிரத்து 957 கோடி ரூபாய்வருவாயை ஈட்டியுள்ளன.
முதல் பெண் இயக்குனர்
‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’நிறுவனத்தில், சுத்திகரிப்புக்கான இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கும், சுக்லா மிஸ்ட்ரிஅந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில்இடம்பெறும் முதல் பெண்மணி ஆவார்.58 வயதாகும் சுக்லா மிஸ்ட்ரி, சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவில், 35 ஆண்டு கால அனுபவம் மிக்கவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)