பதிவு செய்த நாள்
10 பிப்2022
21:14
‘போக்ஸ்வேகன்’ ஏற்றுமதி துவங்கியது
வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ நிறுவனம், அதன் ‘போக்ஸ்வேகன் டி – -கிராஸ்’ காரை, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.முதல் தொகுப்பில் 1,232 கார்கள், மெக்சிகோவுக்கு, மும்பை துறைமுகத்திலிருந்து அனுப்பப்படுகின்றன.
பங்கு சந்தை செயலிநிதி
தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ‘கிரேஸி பின்’ நிறுவனம், பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த அடிப்படைகளை விளையாட்டாக அறிந்துகொள்ள, ‘புல்ஸ்பிரீ’ எனும் மொபைல் செயலியை அறிமுகம் செய்து உள்ளது.பங்குச் சந்தையின் ‘ரியல் டைம்’ தரவுகளை பயன்படுத்தி, துவக்க நிலை முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொண்டு இலவசமாக பயிற்சி பெற, இந்த செயலி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓலா’வின் புதிய முயற்சி
புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கும் நிலையில், ‘ஓலா’ நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வாயிலாக நிதி சேவையிலும் ஈடுபட முயற்சிக்கிறது.இதற்காக, ஏற்கனவே இயங்கி வரும் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
‘நானோ’வை கைவிடாத மனிதர்
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், ‘நானோ’ கார் தயாரிப்பை கைவிட்டுவிட்ட போதும், ரத்தன் டாடா தன் லட்சிய கனவு காரை கைவிடவில்லை.தன்னுடைய நானோ காரை, ‘எலக்ட்ரிக்’ காராக மாற்றிக் கொண்டிருக்கிறார்ரத்தன் டாடா.
குறை தீர்த்த ‘செபி’
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் குறை தீர்க்கும் அமைப்பான, ‘ஸ்கோர்ஸ்’ கடந்த ஜனவரியில் 3,420 புகார்களை வரப்பெற்றுள்ளது.இவற்றில் 3,263 குறைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு 2011 ஜூனில் துவங்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|