பதிவு செய்த நாள்
17 பிப்2022
21:14

புதுடில்லி:நாட்டில், 14.34 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, மத்திய பெருநிறுவனங்கள் விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் 14.34 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் இம்மாதத்தில் 12 ஆயிரத்து, 182 நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை 22.89 லட்சம். இதில் 7.92 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.
ஒரு நபரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களாக, 663 நிறுவனங்கள் ஜனவரியில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஜனவரியில் அதிக பட்சமாக, மஹாராஷ்டிராவில் 2,274 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.இதையடுத்து 1,204 நிறுவனங்களுடன் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும்; 1,160 நிறுவனங்களுடன் டில்லி மூன்றாவது இடத்திலும் உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|