செலவை குறைக்கும் இந்திய குடும்பங்கள்செலவை குறைக்கும் இந்திய குடும்பங்கள் ... ஆயிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., பாலிசி வைத்திருக்கும்  எல்லாருக்கும்  பங்குகள் கிடைக்குமா? ஆயிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., பாலிசி வைத்திருக்கும் எல்லாருக்கும் ... ...
முதலீட்டின் பலனை பாதிக்கும் கசிவுகளை கண்டறிவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2022
19:26

வீடுகளில் சுவர் வெடிப்பு ஏற்பட்டு அல்லது தண்ணீர் குழாய்களில் எப்போதவது கசிவு ஏற்படுவது உண்டு. இவற்றை உடனடியாக கண்டறிந்து சரி செய்து விடுகிறோம். இல்லை எனில் பாதிப்பு தீவிரமாகும்.

இதே போலவே நம்முடைய முதலீட்டு தொகுப்பிலும் நமக்குத் தெரியாமல் கசிவுகள் அல்லது இடைவெளிகள் இருக்கலாம். இவை முதலீட்டின் பலனை பாதிக்கலாம். இத்தகைய நிதி கசிவுகள், இடர்தன்மை இடைவெளி அல்லது அதிக வரி என பலவித வடிவங்களில் இருக்கலாம். இத்தகைய கசிவுகளையும், இடைவெளிகளையும் கண்டறிந்து சரி செய்வது எப்படி என பார்க்கலாம்.
வரி சேமிப்பு:

வரி சேமிப்பிற்காக மேற்கொள்ளும் பொருத்தமில்லா முதலீடுகள், நிதி கசிவாக அமையலாம். வரி சேமிப்பு முதலீடுகள், செயல்திறன் மிக்கவையாகவும் இருப்பது அவசியம். உதாரணமாக, வரி சேமிப்புக்கான வைப்பு நிதி முதலீடு, பணவீக்கத்தின் தாக்கத்தால், எதிர்மறையான பலனையே அளிக்கும். எனில் பொருத்தமான மாற்று முதலீடுகளை நாட வேண்டும்.

கவனம் தேவை:

முதலீடுகள் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லாமல் போனால், சரியாக முடிவெடுப்பதை தவறவிடலாம் அல்லது தவறான முடிவுகளை மேற்கொள்ளலாம். சந்தை போக்கால், முதலீட்டை அவசரமாக விலக்கி கொள்வதும் தவறு. உரிய பயன் தராத முதலீட்டை தொடர்வதும் இழப்பை உண்டாக்கும்.

இடர் தன்மை:

முதலீட்டாளர்கள் இடர் தன்மையையும் கவனிக்க வேண்டும். முதலீடுகளின் இடர் தன்மை காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. சந்தை போக்கால், கடன்சாரா நிதிகள் இடர் தன்மை அதிகமாகலாம். எனவே இடர் தன்மையை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

பணமாக்கல்:

முதலீடு தொடர்பான பணமாக்கல் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு அல்லது பலனில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் போது முதலீட்டின் பணமாக்கும் தன்மையை தவறவிடலாம். இது தேவையான போது பணத்தை எடுக்க முடியாமல் இழப்பை ஏற்படுத்தும்.

முதலீடு செலவு:

முதலீடு தொடர்பான செலவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக கட்டணம் கொண்ட முதலீடுகளை தவிர்க்க வேண்டும், ஒரு சில முதலீடுகள் மறைமுக செலவுகளை கொண்டிருக்கும். அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீடு நோக்கிலான காப்பீடு திட்டங்கள் இவ்விதம் அமையலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)