‘பாரத்பே’ நிறுவனர் நீக்கம் இயக்குனர் குழு அதிரடி ‘பாரத்பே’ நிறுவனர் நீக்கம் இயக்குனர் குழு அதிரடி ...  பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரிப்பு பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2022
20:51

அடுத்த தலைவர் யார்?
‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவரான அதுல் சஹாய் பதவிக்காலம் பிப்ரவரி 28ம் தேதியுடன் நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், அடுத்து அந்த பதவிக்கு யார் வருகிறார் என்பது குறித்த தகவல் எதையும் இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
சரிவு கண்ட ‘பஜாஜ்’
‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை, 16 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், மொத்தம் 3.75 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில் 3.16 லட்சம் வாகனங்களையே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
‘ரிலையன்ஸ்’ வாங்கிய நிறுவனம்
‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனம், ஆடம்பர ஆடைகளை விற்பனை செய்து வரும் ‘ஆப்ரஹாம் அண்டு தாகூர்’ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், அதன் லைப் ஸ்டைல் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, இந்நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை
தென்னிந்திய அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம், தங்கள் தயாரிப்புகள் மீதான ஜி.எஸ்.டி.,யை குறைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளது. உள்ளீட்டு விலை அதிகரிப்பால் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விலையை உயர்த்திய எச்.யு.எல்.,
நுகர்பொருட்கள் விற்பனை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்’, அதன் பொருட்களின் விலையை 3 – 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 100 கிராம் ‘லக்ஸ்’ சோப்பின் விலையை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, ஜனவரியில் பல பொருட்களின் விலையை உயர்த்திய நிலையில், பிப்ரவரியிலும் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)