உங்கள் காப்பீடு திட்ட தேர்வுக்கான  காரணங்கள் சரியா?உங்கள் காப்பீடு திட்ட தேர்வுக்கான காரணங்கள் சரியா? ...  ஆர்.பி.ஐ., இலக்கை தாண்டிய சில்லரை விலை பணவீக்கம் ஆர்.பி.ஐ., இலக்கை தாண்டிய சில்லரை விலை பணவீக்கம் ...
ஆயிரம் சந்தேகங்கள்: பட்டன் போன் வாயிலாக பணம் அனுப்புவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2022
02:44

தமிழ்நாட்டில் செயல்படும், ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ எனும் சிறு நிதி வங்கிகள், நாட்டுடைமை ஆக்கப்பட்டவங்கிகள் தானா? மூத்த குடிமக்களுக்கு, இதர வங்கிகளைக் காட்டிலும், நிரந்தர வைப்பீடுகளுக்கு அதிகமாக வட்டி தருவதாக கூறுகின்றனர். முதலீடு செய்வதால் பாதுகாப்பான சேவைகள் கிட்டுமா?

வெ.மணி, சின்னாளபட்டி.

ஸ்மால் பைனான்ஸ் பேங்குகள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகள் அல்ல. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் அத்தனை நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடைபெறும் வங்கிகளே. அவர்களுடைய வாராக்கடன் அளவு கொஞ்சம் குறைவு; கடன் கொடுப்பதற்கு நிதி தேவை என்பதால், கூடுதல் வட்டி கொடுத்து, முதலீட்டை ஈர்க்க முயன்று வருகிறார்கள்.

பொதுவாக, வங்கியில் முதலீடு செய்து, ஒருவேளை அந்த வங்கி மூழ்கிவிட்டால், 5 லட்ச ரூபாய் வரை முதலீட்டுக் காப்பீடு உண்டு.அதே வசதி, ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கும் உண்டு. வங்கியின் பற்று வரவு அளவின் அடிப்படையில் தான், இது ‘ஸ்மால்’ என்று வரையறை செய்யப்படுகிறதே அன்றி, அதனை வழிநடத்தக்கூடிய வழிமுறைகள் அனைத்தும், ஆர்.பி.ஐ., வகுத்துக் கொடுத்ததே.

தனியார் பெனிபிட் பண்டுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பு நிதி போடலாமா?

ரா.வெங்கட்டராமன்,வாட்ஸ் ஆப்.

பண்டுகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்டவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிக வட்டி என்ற கவர்ச்சிக்காக மட்டும், இத்தகைய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். சில அடிப்படை கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.

வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்கள்? அவை பாதுகாப்பான முதலீடுகள் தானா? நிர்வாகிகளின் பின்னணி என்ன? வங்கித் துறை அனுபவம் அவர்களுக்கு உண்டா?இதைத் தொழிலாக செய்கிறார்களா? வேறு இடத்துக்கு பணத்தை மடை மாற்றி விடுவதற்காக, இத்தகைய பண்டுகளை நடத்துகிறார்களா? அவர்களுடைய ‘பேலன்ஸ் ஷீட்’ எப்படி இருக்கிறது? வாராக்கடன் எவ்வளவு? ஷேர் ஹோல்டர்களுக்கு டிவிடண்டு தருகிறார்களா? இவை போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.

பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, அதனால் தப்பு செய்யாது என்றோ, ‘பெரிய மனிதர்’ ஒருவர் அதன் போர்டில் இருக்கிறார், அதனால் நாணயமாக நடைபெறும் என்றோ நினைத்துக் கொண்டு, நிதி நிறுவனங்களின் பலத்தை எடை போடாதீர்கள்.அதன் செயல்பாட்டை மட்டுமே மதிப்பிட்டு, முதலீடு செய்யுங்கள். இந்த விவரங்களை உங்களுக்கு ஒரு நிதி நிறுவனம் காண்பிக்க தயாராக இல்லை என்றால், வாசலைப் பார்த்து நடையைக் கட்டுங்கள்.

அதென்ன ‘யு.பி.ஐ.,123 பே?’ அதை எப்படிப் பயன்படுத்துவது?

எஸ்.ஜானகிராமன், ஈரோடு.

எல்லாரிடமும் ஸ்மார்ட் மொபைல் போன் இருப்பதில்லை. நிறைய பேர் பழைய பட்டன் போன்களை வைத்துள்ளனர். அவர்களும், தங்கள் போன் மூலமாகவே, நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அறிமுகம் ஆகியுள்ள வசதியே, ‘யு.பி.ஐ., 123 பே’ என்பதாகும். இதற்கு, முதலில் யு.பி.ஐ., ஐ.டி., உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்கு, *99# என்ற எண்ணை அழுத்தி, நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், உங்கள் டெபிட் அட்டையின் கடைசி ஆறு இலக்கங்கள், அந்த அட்டை காலாவதி ஆகும் மாதம், ஆண்டு ஆகியவற்றைப் பதிவு செய்து, இந்த யு.பி.ஐ., – ஐ.டி.,யை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், நீங்கள் ஏதேனும் பொருளை வாங்குகிறீர்கள் என்றால், 08045163666 என்ற ஐ.வி.ஆர்., எண்ணை அழைத்து, பயன்படுத்தும் மொழியைத் தேர்வு செய்து, இணைக்கப்பட்டுள்ள வங்கியைத் தேர்வு செய்து, யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ, அவருடைய மொபைல் எண்ணை பதிவு செய்து, அனுப்ப வேண்டிய தொகையைக் குறிப்பிட்டு, யு.பி.ஐ., ‘பின் எண்ணை’ பதிவு செய்தால் போதும். பணம் தன்னால், உரியவருக்கு போய்ச் சேர்ந்துவிடும். சாதாரணர்களும் தொழில்நுட்பத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்ற முன்னேற்ற சிந்தனையின் முயற்சி இது.

சில கம்பெனிகள் கேட்கும் உத்தரவாதம், சொந்தத்தில் கூடாது, மூன்றாம் நபரிடம் தான் பெற்றுத் தர வேண்டும் என்று கண்டிஷன் போடுவது ஏன்?

கே.சுந்தரம், கோவை.

தங்களுடைய பாதுகாப்புக்காகத் தான். உறவினர் என்றால், நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தினால் கூட, அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடலாம்.ஆனால், உங்கள் கடனுக்காக, கெழுதகை நண்பரே ஆனாலும், கையெழுத்து போட்டுக் கொடுக்க மாட்டார். அவருக்கு உங்களுடைய நிதி நிலைமையும் வாழ்க்கை நிலையும் நன்கு தெரியும். ‘உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள், நீங்கள் யார் என்று சொல்கிறேன்’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா?

என் வீட்டை விற்று, அத்தொகையை வெளிநாட்டில் வசிக்கும் என் மகனுக்கு அனுப்பி வைத்தேன். இந்தப் பணத்தை அளிப்பதற்காக, வங்கி 5 சதவீதம் டி.சி.எஸ்., வசூலித்ததோடு, ஜி.எஸ்.டி.,யும் வசூலித்தது. இந்த டி.சி.எஸ்., தொகையை, ஐ.டி., ரிட்டர்ன் தாக்கல் செய்து, திரும்பப் பெற முடியுமா?

ஜான்சிராணி, இ – மெயில்.

முடியும். உங்களுக்கான ‘பாரம் 26 ஏ.எஸ்.,’ல், பிடித்தம் செய்யப்பட்ட டி.சி.எஸ்., தொகை காண்பிக்கும். பெண்களுக்கான வருமான வரி விலக்கு அளவுக்குள், உங்கள் மொத்த வருவாய் இருக்குமானால், பிடித்தம் செய்யப்பட்ட கூடுதலான தொகை ரீபண்டு ஆகிவிடும்.


மியூச்சுவல் பண்டில், எஸ்.ஐ.பி., வழியாக நேரடியாக முதலீடு செய்ய முடியுமானால், அதற்கான வழிமுறையாக என்ன செய்ய வேண்டுமென கூற வேண்டுகிறேன். மேலும், எந்தவிதமான எஸ்.ஐ.பி., திட்டம் லாபகரமாக இருக்கும்?

சுப்புலக்ஷ்மி, இ – மெயில்.

மத்தியமர்களுக்கு எஸ்.ஐ.பி., தான் உரிய துணைவன். எந்த மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை, அலசி ஆய்வு செய்து முடிவு செய்து கொள்ளுங்கள். அந்தக் குறிப்பிட்ட பண்டு நிறுவனத்தின் வலைத்தளத்தில் போய் பதிவு செய்து, பான் எண்ணையும், வங்கிக் கணக்கையும் இணைத்துக்கொண்டு, எஸ்.ஐ.பி., முதலீட்டை ஆரம்பியுங்கள். ஒவ்வொரு மாதமும், உரிய தேதியில் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படும் விதத்தில், இ.சி.எஸ்., கொடுக்க முடியுமா என்று பாருங்கள்.

இந்த ஆண்டு முழுவதும், பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கப் போகிறது. அதனால், ‘ஹைப்ரிட்’ அல்லது ‘ப்ளெக்சிகேப்' பண்டுகளில், எஸ்.ஐ.பி., ஆரம்பித்தால், நீண்ட கால அளவில் நல்ல வருவாய் கிடைக்கும்.

வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,

pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)