டாடாவின் சூப்பர் செயலி அடுத்த மாதம் அறிமுகமாகிறது டாடாவின் சூப்பர் செயலி அடுத்த மாதம் அறிமுகமாகிறது ...  ஏற்றுமதிக்கு வட்டி சலுகை ‘ஆன்லைன்’ பதிவு அறிமுகம் ஏற்றுமதிக்கு வட்டி சலுகை ‘ஆன்லைன்’ பதிவு அறிமுகம் ...
‘அமேசான் பியூச்சர்' சமரச பேச்சு தோல்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2022
01:18

புதுடில்லி:முதலீட்டை திரும்பப் பெறுவது தொடர்பாக அமேசான் இந்தியா மற்றும் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்கள் நடத்திய சமரச பேச்சு தோல்வி அடைந்துள்ளது.


கிஷோர் பியானியின் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், 23ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்தது.இதை எதிர்த்து பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில், 4 சதவீத பங்குகளை வைத்துள்ள அமேசான் இந்தியா சிங்கப்பூர் மத்தியஸ்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ளது.

எனினும், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, இப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்ள இரு நிறுவனங்களும் முன்வந்தன.

அதன்படி பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் அமேசான் செய்துள்ள முதலீட்டில் குறைந்த பட்சம், 1,500 கோடி ரூபாயை பெறுவது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே சமரச பேச்சு நடந்தது.அப்போது, ரிலையன்ஸ் கையகப்படுத்தியது போக எஞ்சிய பியூச்சர் குழும நிறுவனங்களில் ஒன்றின் பங்குகளை ரொக்கத்திற்கு நிகராக வழங்க, கிஷோர் பியானி யோசனை தெரிவித்துள்ளார்.

இதை ஏற்க, அமேசான் இந்தியா மறுத்து விட்டது.இதையடுத்து, சமரச பேச்சு தோல்வி அடைந்து விட்டதாக, பியூச்சர் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே வாடகை நிலுவை பிரச்னையில் சிக்கியுள்ள பியூச்சர் குழுமத்தின் ‘பிக்பஜார்’ கடைகளை கையகப்படுத்துவதில் ரிலையன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)