பதிவு செய்த நாள்
17 மார்2022
01:26
பெங்களூரு:ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம், அதிநவீன தொழில்நுட்பத்தில், 19 புதிய மின்விசிறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹேவல்ஸ் நிறுவனம், 19 மாடல்களில் ‘சீலிங், பெடஸ்ட்ரியல், வால் மற்றும் வென்டிலேட்டர்’ வகையைச் சேர்ந்த,19 மின்விசிறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ‘எகோஆக்டிவ்’ தொழில்நுட்பத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புடன் குறைந்த மின் செலவில் இயங்கக் கூடியவை. அதனால் இந்த மின்விசிறிகளை வாங்குவோர் ஆண்டுக்கு, 1,900 ரூபாய் மின்செலவை மிச்சப்படுத்தலாம்.
‘அமயா’ டிசைனரி மின் விசிறி, கவர்ச்சியான கண்ணாடி பதிக்கப்பட்ட இறக்கைகளை உடையது. இத்துடன் ‘பி.எல்.டி.சி.,’ தொழில்நுட்பத்திலும் 6 மின்விசிறிகள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன.‘‘மின் சிக்கனத்திற்கு உகந்த பலவகை மின்விசிறிகளை அறிமுகப்படுத்தி புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்,’’ என ஹேவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மின் நுகர்வோர் சாதனங்கள் பிரிவு தலைவர் ரவிந்திர சிங் நெகி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|