காஸ் சிலிண்டருக்கு பணம் குரல் வாயிலாக செலுத்தலாம் காஸ் சிலிண்டருக்கு பணம் குரல் வாயிலாக செலுத்தலாம் ...  ஏற்றுமதி அதிகரிப்பு அமைச்சர் பெருமிதம் ஏற்றுமதி அதிகரிப்பு அமைச்சர் பெருமிதம் ...
இந்தியாவின் வளர்ச்சி மூடிஸ் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2022
21:38

புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து அறிவித்துள்ளது, தர நிர்ணய நிறுவனமான ‘மூடிஸ்’.

இதற்கு முன்பாக, நடப்பு ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என, இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இப்போது, அதை குறைத்து, 9.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து உள்ளது.

மேலும் தெரிவித்துள்ளதாவது:உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், உலகளவில் மூன்று முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு, நிதி மற்றும் வணிக சீர்குலைவுகள், புவிசார் அரசியல் பாதிப்புகளால் நம்பிக்கை குறைவு என, முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை, அதன் பொருளாதாரத்தை அதிகம் பாதிப்பதாக உள்ளது.


அதிக எரிபொருள் செலவு, நாட்டின் திட்டமிட்ட மூலதன செலவினங்களை பாதிக்கும். இதனால், இந்தியாவின் வளர்ச்சியை, நடப்பாண்டில் 9.5 சதவீதமாக கணித்திருந்ததை, 9.1 சதவீதமாக குறைத்து அறிவிக்கிறோம். அடுத்த ஆண்டில், வளர்ச்சி 5.4 சதவீதமாக இருக்கும். நடப்பு ஆண்டு இறுதியில், பணவீக்கம் 6.6 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு அறிவித்து உள்ளது. சீனாவை பொறுத்தவரை, வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 5.2 சதவீதமாகவும்; அடுத்த ஆண்டில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)